தன் மகிழ்ச்சி மறந்து.. பிறர் மகிழ்ச்சிக்காக வாழும் ஆண்கள்!

Nov 19, 2026,12:37 PM IST

- அ.சுபாலட்சுமி


ஆண் பிறக்கும்போது அழுததை மட்டுமே அனைவரும் இயல்பாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், வளர வளர அவனுக்கு அழுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாமல் போனது.


ஆண் அழுதால் 'கோழை' என்ற பட்டம் சூட்டத் தொடங்கியது இந்தச் சமூகம். தன் தாயின் அரவணைப்பில் வளரும் அவன், பிறகு தன் தந்தையின் தோளில் ஏறி இந்த உலகத்தைப் பார்க்கிறான். அப்போது அவனுக்குத் தெரியாது, தானும் ஒருநாள் தன் குழந்தைக்குத் தோள் கொடுப்போம் என்று.


தன் மகிழ்ச்சியையும் கஷ்டத்தையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்பவன், ஒவ்வொரு கஷ்டமான சூழலிலும் தன் உணர்வுகளை அடக்கி வாழக் கற்றுக்கொள்கிறான். படிப்பு முடித்ததும் வேலையைத் தேடி அலைகிறான்; அப்போது தன் முதல் பொறுப்பைச் சுமக்கத் தொடங்குகிறான்.




வேலை கிடைத்ததும் திருமணம் செய்கிறான்; புதிய பொறுப்புகளைச் சுகமாக ஏற்றுக்கொண்டு பயணிக்கிறான். அடுத்து குழந்தை பிறந்ததும் தனக்காக வாழ்வதையே மறந்து, வேலை, வீடு என்று ஓட ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு முறையும் தன் குடும்பத்திற்காகத் தன் ஆசைகளை அடக்கி வாழப் பழகிக் கொள்கிறான்.


தன் தந்தையின் உழைப்பையும் கஷ்டத்தையும் இப்போது அவனும் சுமக்கத் தொடங்குகிறான். தன் குடும்பத்தின் மகிழ்ச்சியில் தன் கஷ்டங்களைப் புதைத்து விடுகிறான். இவ்வாறாகப் பிறருக்காகத் தன் மகிழ்ச்சியை மறந்து வாழப் பழகிக் கொள்கிறான்.


இறுதிவரை பிறர் மகிழ்ச்சியிலேயே தன் மகிழ்ச்சியைக் கொண்டாடுபவன்தான் ஆண்.


வாழ்த்துகள் ஆண்களே!


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்