சென்னை : கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டயிட்டவர் வி.எஸ்.பாபு. திமுக.,வில் நீண்ட காலமாக இருந்த இவர், பிறகு அங்கிருந்து விலகி, தவெக.,வில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 8795 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். எம்எல்ஏ.,வாக பதவியேற்ற சில நாட்களிலேயே இவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
சுவாச கோளாறு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு செப்டம்பர் 09ம் தேதியன்று வி.எஸ்.பாபு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரது உடல்நிலை குறித்து தகவல் ஏதும் தெரியாததால் சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கிடையில் இவரது உடல்நிலை குறித்து விபரம் வெளியிடக் கோரி கொளத்தூர் தொகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர் நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 02.24 மணியளவில் எம்ஜிஎம் மருத்துவமனையில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டனர். வி.எஸ்.பாபுவின் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து வி.எஸ்.பாபுவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெக தலைவரும் முதல்வருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் வி.எஸ்.பாபு மறைவிற்கு இரங்கல் தெரிந்து வருகின்றனர். வி.எஸ்.பாபு உயிரிழந்ததை அடுத்து, தவெக எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை மீண்டும் 108 ஆக சரிந்துள்ளது.
பன்முகம் கொண்ட ஆண்களே!
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்: மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
A Tribute to My Dear Men
பார்த்தசாரதி
மாலனுக்கு எழுதிய 6 பக்கக் கடிதம்!
சக்தி,பக்தி,முக்தி!
கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன் தெரியுமா?
செவித்திறன் கருவி எங்கே?
வீடு
{{comments.comment}}