- "சொல்லருவி" ரஞ்சிதா மணியரசன்
மண்பூசப்பட்ட
கூரைவேய்ந்த வீடு,
தரையெல்லாம்
சாணம் மொழுகி,
விறகு அடுப்பினையும்
வழித்து விட்டிருக்கிறாள் நல்லி....
நல்ல மாநிறமான
மேனியாம்...
அமாவாசை இருட்டென,
கூந்தலும் உலாவி
கிடக்கும் கணுக்கால்வரை,
இரண்டு பானை
உயரம் தான்...
நல்லகுணக்காரி
நாவினிக்கும்
பேச்சுக்காரி...

கண்டாங்கி சேலையில
அம்மன் செலையாட்டம்
இருப்பா....
நெத்தியில
குங்குமத்த
அடர்த்தியா வச்சிருப்பா...
குடிசையானாலும்
கோயிலப்போல
பராமரிப்பா...
மரிக்கொழுந்தும்,
மல்லிகைப்பூவும்
அலாதியாய்
விரும்பும்...
நேசக்காரி...
அதிகாலை முதல்
அந்திமாலை வரை
அவ மாமனுக்கு
சரியா.. வயல்காட்டுல
வலைய வருவா....
கட்டின புருசன்
பனைமர ஒசரமா...
கருப்பசாமி கணக்கா...
அடைகாக்கும்
கோழிபோல அத்தனை பாசம் அவுகமேல...
வெள்ளென வீடு சேர்ந்ததும்..
அலுப்பே இல்லாம
சேலைய தூக்கி சொருகிக்கிட்டு...
சக்கரமாய் வேலைய
துரிதமா முடிப்பா....
அத்தனை வலியும்
மயிலிறகு போல
காத்துல பறக்கும்...
அவ கையால சோறு
திண்ணா....
அவதான் என் மகராசி..
என்னாச்சுனு விளங்கல...
எனக்கு முன்ன போய் சேர்ந்துட்டா...
பூவும் பொட்டுமா
மங்கலமா...
என் உசுரான நல்லி...
அவ போயி
பதினாறுவருசமாச்சி....
(ரஞ்சிதா மணியரசன், M.A.,B.Ed..,Eng, கவிஞர், ஆசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளி, நாமக்கல்லைச் சேர்ந்தவர்)
அவளின் நேசம்!
தென்தமிழ் தலையங்கம்: பயங்கரவாதத்தின் நிழல் நீங்கிய காஷ்மீர் - வரலாற்றுச் சாதனை!
ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?
உன் விழியில் மலர்ந்த முதல் கவிதை!
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்: மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
‘GTA 6’ ட்ரெண்டில் இணைந்த பிரதமர் மோடி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவு!
வி.எஸ்.பாபு மறைவு: ஆளுநர்,முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன் தெரியுமா?
கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காய விலை: ஒரு கிலோ ரூ.230-க்கு விற்பனை!
{{comments.comment}}