களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

Su.tha Arivalagan
Oct 17, 2026,11:27 AM IST

- அ.சுபாலட்சுமி


பழமொழிகள் அறிவோம் வரிசையில் இன்று ஒரு சுவாரஸ்யமான பழமொழி குறித்ததான் பார்க்கப் போறோம்.


"களவும் கற்று மற" என்ற பழமொழி குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்தப் பழமொழி குறித்து நிலவும் பொதுவான தவறான கருத்து மற்றும் அதன் உண்மையான விளக்கம்தான் இங்கு வருகிறது.


பொதுவான தவறான கருத்து:


களவு என்றால் திருட்டு. திருடும் கலையை கற்றுக்கொண்டு, பின்பு அதைச் செய்யாமல் மறந்துவிட வேண்டும் என்று பலர் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். ஆனால் திருட்டை ஒரு தொழிலாகக் கற்றுக்கொள்ளச் சொல்லும் பழமொழி இதுவல்ல.


உண்மையான மற்றும் சரியான பொருள்:




களவும் கவறு மற - 'கவறு' என்றால் சூதாடும் கருவி அல்லது சூதாட்டம் என்று பொருள். எனவே, திருடுதலையும் சூதாடுவதையும் அறவே கைவிட்டு மறந்துவிட வேண்டும் என்பது இதன் பொருள்.


மற்றொரு பொருள்:


களவும் கத்து மற - 'கத்து' என்றால் பொய்மை என்று பொருள். திருடுதலையும் பொய்யையும் நம்மிடமிருந்து முற்றிலும் நீக்கி மறக்க வேண்டும்.


இன்னொரு அர்த்தமும் உண்டு


களவு அற்று மற: திருட்டுத் தனம் நம்மிடம் சிறிதும் இல்லாமல், அதை அடியோடு மறந்து நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும்.


நம் முன்னொர்கள் நமக்கு நல்லதையே சொல்லி தந்துள்ளனர். ஆனால் வழக்கம் போல நாமதான் அதை தவறாக புரிந்துகொண்டு முன்னோர்களை குறை கூறுகின்றோம்... இதற்கு முக்கியக் காரணம், சுத்தத் தமிழை மறந்து விட்டதால்தான்!


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)