World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!

Oct 16, 2026,12:31 PM IST

- அ. சுபாலட்சுமி


உலகளாவிய பசிப் பிணியைப் போக்குவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இன்று உலக உணவு நாள் அனுசரிக்கப்படுகிறது. 


இன்றும் பசி என்பது பெரிய பிணியாகத்தான் உள்ளது. பல நாடுகளில் உணவு இல்லாமல் பலர் உயிர் துறக்கின்றனர். 

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பர், காரணம் மனிதன் உணவை மட்டுமே தன் வயிறு நிறைந்ததும் மனதும் நிறைந்து போதும் என்பான். 


வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். 


இன்று பல உணவகங்களில் உணவை வீணடிக்கின்றனர் பலர். திருமண வீடுகளில் வீணாகும் உணவைக் கணக்கில் எடுத்தால் பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் பசியாற முடியும். பணம் அதிகம் இருந்தால் நான்கு பேருக்கு உணவு வழங்கி உதவலாம். பிறர் பசிப் பிணி போக்குது என்பது அவர்களின் உயிரை பாதுகாப்பதற்கு சமம்.




இன்றோ உணவுகளில் மருந்து தெளித்து உணவே மருந்து என்பது மருவி மருந்தே உணவு என்ற காலம் ஆகிவிட்டது.

பணத்தாசை பிடித்த மனிதர்கள், உணவை கலப்படம் செய்கிறார்கள்.  அதிலும் இன்றைய கலகட்டத்தில் ஊட்டசத்து என்பது பழங்கள் மற்றும் காய்களில் எங்கே இருக்குறது என்பது கேள்விக்குறியே?


உணவை நமக்கு தரும் உழவர்களும் கடவுள் தான்,ஆனால் இன்று நாம் அதை உணர மறுப்பதன் காரணமாக பல உழவர்கள் தனக்கு உணவு இல்லாமல் உயிர் துரக்கின்றனர். 


விவசாயம் தான் முதன்முதலில் ஆரம்பித்த தொழில் ஆகும். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் விவசாயம் எங்கே? விவசாயியின் நிலமை என்ன? விவசாய நிலத்தில் வீடு கட்டிக்கொண்டு உணவை தேடி அலைகிறான் மனிதன்.

உணவுக்காக தான் மனிதன் வேலை செய்கிறான், ஆனால் இன்று உணவை மறந்து வேலை செய்கிறான். பணத்தின் மதிப்பை அறியாத மனிதன் உணவின் மதிப்பையும் அறிய மறக்கிறான். 




இன்றைய நவீன உலகில் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு ஊட்டசத்து மிகுந்த உணவை கொடுக்கும் பழக்கம் மாறிவிட்டது. பீஸா, பர்கர், பிஸ்கட், கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றை கொடுத்து பழக்குவதன் விளைவாக பாதுகாப்பற்ற உணவை தருகிறார்கள்.


கல்வி அறிவு இருந்து என்ன பயன்? பாதுகாப்பற்ற உணவு என்பதை அறிந்தும் தன் குழந்தைக்கு தரும் பெற்றோர்கள் இருப்பதால் தான் விற்பவர்களும் தைரியத்துடன் விற்கின்றனர். 


மனிதா, இனியாவது நீ பிறருக்கு உணவளித்துப் பார். அதனால் நீ அனுபவிக்கும் மகிழ்ச்சியை அனுபவி.


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்