சத்துணவு.. ஏழைபிஞ்சுகளின் ஏக்க பெருமூச்சும் பசித்த வயிறுகளின் பரிதவிப்பும்!

Oct 14, 2026,04:48 PM IST
- காஞ்சி கிருபா

கிழிந்து நைந்து போன
பையில்....
புத்தகங்களோடு
எட்டிப் பார்க்கும்
என் அலுமினிய தட்டு

ஐந்தாம் வகுப்பின்
மூன்றாவது பாட வேளை
முடியும் நேரத்தில்...

ஏங்கி தவிக்கும்
சத்துணவுக்காய் மனசு!!

ஐந்து ஆண்டுகளாக
நிரந்தர சத்துணவு லீடர்...‌

கிருபாவாகிய நான்
நேர்மையுடனும் உண்மையுடனும்
வரிசையில் நின்று
சத்துணவு வாங்கி
கொடுப்பேனென்று...‌‌...‌‌



காலைப்பசியோடும்
வெறும் வயிற்றுச் சோர்வோடும்
படித்து களைத்து..
உணவு இடைவேளையில்
உயிர் வந்து சேரும்
மறக்கவும் மறுக்கவும்
முடியவில்லை
சத்துணவே உயிர் தந்தது!!!

ஏழைபிஞ்சுகளின்
ஏக்க பெருமூச்சும்
பசித்த வயிறுகளின் பரிதவிப்பும்
உங்களுக்கெங்கே
புரியப் போகிறது?

சத்துணவு சாப்பிட்டவர்கள்
சாதனைப் பூக்களாக
மலர்ந்து மணம்வீசப்போவது
உங்களுக்கே 
தெரியப்போகிறது?

(ஜோ. கிருபானந்தம் என்கிற காஞ்சி கிருபா, 25 ஆண்டுகளாக முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார்.  பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், சிறுகதை கவிதை கட்டுரை படைப்பாளர். விஜய் டிவி கலக்கப்போவது யாரு பார்ட் 2 நிகழ்வில் பங்கு பெற்று காமெடி கிங் விருது, சன் டிவி அசத்தப்போவது யாரு நிகழ்வில் பங்கேற்று அசத்தல் மன்னன் விருது பெற்றுள்ளேன். பல குரல் மன்னன், மேடைப் பாடகர், கிராமிய பாடல் நடன கலைஞன். இந்து தமிழ் திசை சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் அன்பாசிரியர் விருது  பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்