உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!

Su.tha Arivalagan
Oct 06, 2026,01:56 PM IST

- அ.சுபாலட்சுமி


பல நேர போராட்டத்தில் உறுதியாய் நின்ற வேர் 

இறுதியில் தனக்கு கிடைத்த நீரை நம்பி 

ஏமாற்றம் அடைந்தது.




--




தன்னை யாரும் வேட்டையாட முடியாது என்ற தைரியத்தில் 

கம்பீரமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது 

மான் சிலை.


--




பாரில் பலருக்கும் நிழல் தரும் மலைக்கு 

குடையாய் இருந்து 

நிழல் தரும் மேகக்கூட்டங்கள்....


--




கடற்கறையில் 

உல்லாசமாய் காற்று வாங்கிக்கொண்டு 

நடை பயணம் மெற்கொண்டிருக்கும் புறா.


--




மாட்டின் மீது இலவசமாக ஏறி 

சவாரி செய்ய காத்திருக்கும் கொக்குகள்


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)