- வ.கமலா
வாழ்நாள் முழுவதும் அறம் செய்யாமல் அதாவது அறச்செயல்கள் செய்யாமல் இருந்துவிட்டு உடல்நலம் குன்றிய பிறகு அதாவது தமது இறுதி காலத்தில் செய்து கொள்ளலாம் என்று நினைத்து தானம் போன்ற செயல்களை செய்யாமல் இருப்பது நல்லதல்ல.
ஒருவர் பெருஞ்செல்வந்தராக இருந்தார்; அவரிடம் பல வேளையாட்கள் பணிபுரிந்து வந்தனர். அனைவரையும் நன்றாக வேலை வாங்குவார், இனிமையாக பேசி தனது காரியத்தை சாதித்துக் கொள்வார்; ஆனால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யமாட்டார்.
வேலை செய்பவர் தம் மகனின் உடல்நிலை சரியில்லை என்று பணம் கேட்கும் போதுகூட தருவதற்கு அவரது மனம் இடங்கொடாது; ஆனால் அவரது மனைவி பணம் தாருங்கள் என்று கூறினாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவார். அவரது முதிய பருவத்தில் படுக்கையில் இருக்கும் போது அவரால் பேசமுடியவில்லை சைகையால் பணத்தை ஏழ்மையில் உள்ளவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என்கிறார்.
எவருக்கும் அவரது சைகையின் அர்த்தம் புரியவில்லை இதுதான் வாழ்க்கை எனவேதான் வள்ளுவர், இளமைப் பருவத்தில் அறச்செயல்களை செய்தல் வேண்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் செய்தல் வேண்டும் என்றும் நமது உடல் அழியும் காலத்தில் அழியாத்துணை என்றார்.
இதனையே தமது குறளில்

அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை(கு.எண்:36)
என்று கூறுகின்றார். எவ்வளவு பணம், பொருள், சொத்து சேர்த்து வைத்தாலும் எதுவும் நம்மோடு வராது. நாம் செய்த புண்ணிய செயல்கள் தான தர்மம்தான் என்பதை உணர்த்துகின்றார். அச்செயலையும் உரிய நேரத்தில் செய்து முடித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்
(கவிஞர் வ.கமலா, B.sc, M.A., M.com, M.Ed., M.phil. ஓய்வு பெற்றஆசிரியர். மூன்று நூல்கள் எழுதியுள்ளேன். ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறேன்)
செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
சிறு துளியின் பெரும் பயன்!
உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!
அறன் வலியுறுத்தல்
என் இறைவன்!
ஒரு கைப்பிடி நம்பிக்கை!
ஐந்து கரத்தனை.. யானை முகத்தனை.. விநாயகர் துதியின் பொருள் என்ன தெரியுமா?
Sudha Thirunarayanan Cute Story: கோலம்!
மல்லிகைப் பூ.. அல்ல அல்ல.. மாயப்பூ!
{{comments.comment}}