- "மலைமலர்" கி. மேனகா
வண்ணத்துப் பூச்சியின் வாயிலுள்ள சுவை.......
தேனிக்களின் வீட்டிலுள்ள சுவை.....
செங்கரும்பில் சுரந்த சாற்றின் சுவை.....
கன்றின் பசிதீர்க்க தாயின் மார்பில் சுரந்த அமுதச்சுவை....
விதைகள் நிறைந்த விருச்சத்தின் சுவை.....
விழுந்த விதைகளும் ஏங்கும் விண் மழையின் குளிர்ந்த சுவை......
எட்டு திக்கும் புகழ் மணக்கும்
முண்டாசுப்
பாரதியின் பாச்சுவை....
உணர்வோடும், உயிரோடும் கலந்த
பாவேந்தரின் சொற்சுவை....
அற இலக்கியத்தில் சொட்ட சொட்ட சுரந்த பக்திச் சுவை...
அகப்பொருளில் தோன்றிய. அன்புச் சுவை.....

புறப்பொருளில் எழுந்த வீரச்சுவை....
வள்ளுவனின் காமத்துப் பாலில் சுரந்த காதல் சுவை...
அகமும் புறமும் புரண்டோடிய சங்கத்தமிழின் சுவை.....
அறுசுவையும் தோற்றுப்போகும்....நம் தமிழ் சுவை முன்.....
பருக.... பருக... தாகம் தீர்க்காத தமிழ்ச்சுவை....
சுவைக்க... சுவைக்க...நா ஊறும்...
சுவைத்து முடித்தால் மனம் நெகிழும்.....
தமிழ் அன்னையின் மார்பில் சுரந்த அமுதம் அது..
ஒவ்வொரு தமிழனின் உயிர் காக்கும் மருந்து.
தமிழுக்கும்
அமுதென்று
பேர்......!
(கி.மேனகா B.A, B.Ed, M.A. கணவர் மோகன்தாஸ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஏற்காடு மலை நகரில் வசித்து வருகிறார். தமிழ் ஆசிரியர். கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம் உடையவர்)
சமையல் With ஸ்வர்ணா: லஞ்ச் பாக்ஸ் ரெசிபி - சேப்பங்கிழங்கு டொமட்டோ பெப்பர் ஃப்ரை!
வகை வகையான வணிகம்.. மலைக்க வைத்த மதுரை நகர அங்காடி வீதி!
உன் விழியில் மலர்ந்த முதல் கவிதை!
வண்டு உண்ட மதுவின் சுவை!
Short Story: சக்கரை!
விநாயகர் துதி
மனிதன் மாறி விட்டான்.. ஆனால் தொன்மை மாறலையே!
கண்ணுக்குத் தெரியாத காற்று கையில் பிடிக்க முடியாத மேகம்!
மௌன சபதம்
{{comments.comment}}