- ஜோ. கோவில்பட்டி
பௌர்ணமி நிலவு கல்லூரி வளாகம் முழுவதும் ஒளி வெள்ளத்தில் பிரகாசித்தது. சிவப்பு நிற கட்டிடத்தில் உள்ளே அறை எண் 76ல் படிப்பு நேரம் முடிந்த பிறகு மல்லிகை காபி பாரில், தேநீர் குடித்துவிட்டு, இரண்டாம் ஆட்டம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
'எனக்குக் கோட்டைச் சுவர் ஏறத்தெரியாதே!' என்று, "நான் வரவில்லை" என்று சொல்லிவிட்டேன். "டேய்! நாங்கள் இருக்கிறோம் வா!" என்று பாசம் பொங்க அழைத்தார்கள்.
'பாசம் மட்டும்தான் உள்ளது' என்று நம்பி அவர்கள் கூட நடைபயணமாகச் சென்று 'லேடிடோக்' தாண்டி, 'ராமகிருஷ்ணன் வீடு' வழியாக 'ஜெயராஜ் தியேட்டர்' வந்து சேர்ந்தோம்.
படம் எல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் கல்லூரி நுழைந்து விடுதி சுவர்கள் மேல் கைவைத்து 'தடதட'வென முதல் மாடி ஏறிவிட்டார்கள். நான் நிலவைப் பார்த்து கொண்டே இருந்தேன்.
.webp)
சில நிமிடங்களுக்குப்பிறகு என் முன் போர்வை இறங்கியது. 'பிடித்துக்கொள்' என்று மெதுவாகச் சொன்னார்கள். கிணற்றில் கயிறு கட்டி இழுப்பது போல, எனை இழுத்தார்கள்.
நான் மெதுவாக மேலே ஏறும் நேரத்தில் ஒரு கை, எனை இறுகப்பற்றி மேலே தூக்கியது. நெஞ்சம் பதறிப்போனேன்.
"வார்டன் ஐயா" கை தூக்கிவிட்டார்.
நம்ம பசங்க நல்லவங்க மாதிரி வார்டன் அறையைத் தட்டி, நம்மள காட்டிக் கொடுத்துவிட்டார்கள் பாஸ்.
'இது நியாயமா? தர்மமா?' என்று யோசித்து முடிப்பதற்குள் வார்டன் அறையில் விசாரணை நடந்தது. நான் புல்லாங்குழல் ஊமையானது போல நின்றேன். மூன்று நாட்கள் விடுதியில் உணவு கட்.
நிலவை பார்த்து கொண்டே தூங்கினேன். மனசில், 'இனி அந்தத் தவறு செய்யக்கூடாது' என சபதமிட்டுக் கொண்டேன். நிலவு, ஜன்னல் வழியாக என்னைப் பார்த்து மேகங்களுக்குள் மறைந்து சென்றது.
(கட்டுரையாளர் ஜோ. கோவில்பட்டி, 33 வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைப்பேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்.)
மௌன சபதம்
பிரபஞ்சம் என்றால் என்ன.. எண்ணம் போல் வாழ்க்கை (2)
அரசமரம் துளிர்த்தது… கடன் சுமை குறைந்ததா?.. வேரில் இருந்து விழுது வரை (7)
கைப்பேசியில் கரைகிறது மனமே?
தம்பி – என் இதயத்தின் செல்லக் குழந்தை.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (17)கொட்டும் மழை .. கொஞ்சும் மேகலை
கொட்டும் மழை .. கொஞ்சும் மேகலை
மனிதநேயம்
சமையல் With ஸ்வர்ணா: லஞ்ச் பாக்ஸ் ரெசிபி - சேப்பங்கிழங்கு டொமட்டோ பெப்பர் ஃப்ரை!
மூன்று சக்கர வண்டி.. ஒரு நிமிடக் கதை (62)
{{comments.comment}}