- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
முக்காலமும் உணர்ந்தவன்!
முழுமுதற் கடவுள் அவன்!
எக்காலமும் அருள்பவன்!
எல்லோர்க்கும் தந்தை அவன்!
காத்திருந்த கண்களுக்குக்
காட்சி தருபவன்!
தீராத துயரங்களைத்
தீர்த்து வைப்பவன்!
பார் புகழ வாழ
வாழ்த்துகின்றவன்!
வானம் பூமி என்று எங்கும்
நிறைந்து இருப்பவன்!

ஆத்திகத்தைப் பேசுவோரை
ஆதரிப்பவன்!
நாத்திகத்தைப் பேசுவோர்க்கும்
நாக்கு தந்தவன்!
நல்வழி காட்டுபவன்!
நானிலத்தை ஆள்பவன்!
கற்றோர்க்கும் கல்லார்க்கும்
கருணை புரிபவன்!
கந்தன் என்றும்
குகன் என்றும்
பெயர் கொண்ட
மயில் வாகனன்!
எனைக் காக்க யார் உண்டு
வேலவா!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).
செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
சிறு துளியின் பெரும் பயன்!
உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!
அறன் வலியுறுத்தல்
என் இறைவன்!
ஒரு கைப்பிடி நம்பிக்கை!
ஐந்து கரத்தனை.. யானை முகத்தனை.. விநாயகர் துதியின் பொருள் என்ன தெரியுமா?
Sudha Thirunarayanan Cute Story: கோலம்!
மல்லிகைப் பூ.. அல்ல அல்ல.. மாயப்பூ!
{{comments.comment}}