மனிதன் எதைத் தேடி ஓடுகிறான்?
Oct 22, 2026,04:45 PM IST
- அ.சுபாலட்சுமி
தாயின் கருவறையில்
வெளிச்சத்தை தேடி ஓடுகிறான்.
வெளிச்சத்திற்கு வந்ததும்
தாயைத் தேடி ஓடுகிறான்.
தாயை கண்டதும்
தன் உறவுகளை தேடி ஓடுகிறான்
தன் உறவுகளை கண்டதும்
நண்பர்களை தேடி ஓடுகிறான்.
தன் நண்பர்களை கண்டதும்
கல்வியை தேடி ஓடுகிறான்.
கல்வி கிடைத்ததும்
செல்வத்தை தேடி ஓடுகிறான்.
செல்வம் வந்ததும்
தன் துணையை தேடி ஓடுகிறான்.
துணை கிடைத்ததும்
குழந்தையை தேடி ஓடுகிறான்.
குழந்தை வந்ததும்
தன் பேரக்குழந்தையை தேடி ஓடுகிறான்.
பேரக்குழந்தையை கண்டதும்
தன் உடல்நலன் தேடி ஓடுகிறான்.
இறுதி வரை ஓடும் மனிதன்
தனக்கு தேவை அன்பு மற்றும் பாசம் என்பதை
உணர மறக்கிறான்!
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)