- க.யாஸ்மின்சிராஜீதீன்
சாதனை என்பது
சாதரணமில்லை
வேதனைகளை தாங்க வேண்டும் என்பதில்
ஐயமில்லை
சிறு துளி ஓடும்
பெருவெள்ளமாய்
சிறுவயது நகரும்
பெரியவராய்
வயது என்பது எண்களே
தடையில்லையே
வயது அனுபவத்தின் உயர்வே
மனபக்குவமே...

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் கொள்..
தயக்கம் நம்மை பின்னே தள்ளிவிடும் நினைவில்கொள் ...
உற்சாகம் மனதிலும்
செயல் நடைமுறையிலும் கொள்...
சுற்றுப்புறத்தை
நேர்மறையான எண்ணம்கொண்ட மனிதர்களால்
அமைத்துக்கொள்...
நம் உற்சாகத்தை
குறைப்பனவற்றை விலக்கிக்கொள் ..
சின்ன சின்ன முயற்சிகளை
உனதாக்கிக்கொள்..
காலமேலாண்மை சரியாகவும்
காலமறிந்தும் களமாட கற்றுக்கொள் ..
இந்த வயதில் ஏன் என்ற
ஏளனம்..
சாதனையின் விழுதாக பெருக வேண்டும் மனதில்கொள்
முடியாது என்பது சோம்பலின்
சூழ்ச்சி என்பதை நினைவில்கொள் ...
முடியும் என்பது சாதனையின்
விதை என்பதை கருத்தில்கொள்..
விமர்சனங்களை தடைக்கற்களாக எண்ணாமல்
படிக்கற்களாக மாற்ற பழகிக்கொள் ...
வரங்கள் அனைவருக்கும் உண்டு,
அவற்றின் விலை முயற்சி என்பதை மறவாதே...
முயன்றால் காற்றுகூட கைகொடுக்கும் ...
காற்றுள்ளபோதே தூற்றப்பழகிக்கொள் ...
வயது எதுவானாலும்
முயற்சி உன்னுடையது..
திறமையை வளர்த்துக் கொள்
தகுதியை உயர்த்திக்கொள்...
உனக்கானது உன்னைநாடிவரும்
நம்பிக்கைகொள்..
தொடர்செயலே வெற்றிபெறும் என்பது நிதர்சனமே ..
காலம் நம் வழிகாட்டி
காத்திருப்பு நம் வெற்றி ..
உழைப்புக்கு நிகரில்லை
வெற்றிக்கு குறைவில்லை..
சாதிக்க வயது தடையில்லை
மனமே...
காலத்தை வெல்ல முடியாது
காலத்தை பயன்படுத்தி வெல்லமுடியும் ..
நம்மால் முடியாது என்று நாம் சொல்வதெல்லாம் யாரோ ஒருவரால் சாதிக்கப்படுகிறது ..
முடியும் என்பது
உழைக்கத்தூண்டும்
முடியாது என்பது இளைப்பாறத்தூண்டும் ...
இன்றிளைப்பாறினால் என்னென்ன நேருமோ வழிதனிலே..
இன்றைய செயல்களை
இன்றே முடி ..
நாளை என்பது எதிர்பார்ப்பே ஆனால் நம்பிக்கைதான் வாழ்க்கையே...
செயல்களை தள்ளிப்போடுவது
ஓய்வின் நீட்சியே..
வயதிற்கு அனுபவமுண்டே சோர்வுயில்லையே..
நம்மால் முடியாது என
நீ நினைக்கும் வரை உனக்குத் தாழ்வு இல்லையே ..
பிறர் உருவாக்கிய பாதை
நடக்க எளிமையானதே. ..
உனக்கான பாதையில் நீ நடந்தால் வெற்றி வாகை உனக்குத்தானே ..
சாதிக்க வயது தடையில்லை
நீ தளர்வடையும் வரை
உனக்கு வீழ்ச்சியில்லை..
மனமே நம் எஜமான்
முயற்சியே நம் வெற்றி
வயதென்பது எண்களே மனமென்பது தூண்டுகோளே...
சாதிக்க துணிவுகொள் வாழ்க்கை எனும் கடலில் நீச்சலடிக்க முயற்சிக்கொள் ..
காலம்நகடந்தாலும்
நின்று பேசும் ...
சாதனை சரித்திர ஏட்டில் ஏறும்...
மனமே..! மனமே ..!
சாதனை முடியாதது அல்ல ..
நீ முயற்சிகொண்டால்
சரித்திரம் படைக்காமல்
போவதில்லை..
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை
சாதிக்க வயது தடையில்லை!
You are the Butterfly
Ominous Silence
பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)
Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?
{{comments.comment}}