அனைவரும் கொண்டாடும் என் பிறந்தநாள்!

Oct 21, 2026,02:33 PM IST

- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்


ஐப்பசி மாதம் பிறந்தாச்சு

ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் வந்தாச்சு 


எனக்குள் பெருமிதம் புகுந்தாச்சு 

ஏன் என்ற எண்ணம் உங்களுக்குள் வந்தாச்சு 

பிறந்தநாளுக்கும் சிறப்புண்டு என மகிழ்ந்தாச்சு 


கல்விக்கும் தொழிலுக்கும் 

சிறப்பு செய்யும் நன்னாளாச்சு 

கண்ணே இங்கே வா என தந்தை என்னை அழைச்சாச்சு 

ஏன் என்று தெரியல 

தந்தை அருகில் சென்றாச்சு


கைநிறைய மிட்டாய் 

தந்தை எனக்கு தந்தாச்சு 




ஏதும் அறியா பிள்ளைமுகம் மகிழ்ந்தாச்சு 


என் செல்ல மகளே 

இன்றுதான் உனக்கு பிறந்த நாளாச்சு 


அனைவருக்கும் மிட்டாய் அளித்து மகிழ்ச்சிகொள் என்று சொல்லியாச்சு


காலங்கள் பல கடந்தாச்சு

தந்தையின் சொல் அமிர்தமாச்சு 


ஆங்கில மாத பிறந்த தேதியோ மறந்தாச்சு 


ஆயுதபூஜையும் சரஸ்வதி பூஜையும் பிறந்த நாளென மனதில் பதிஞ்சாச்சு


உயிர் கொடுத்த தந்தையும் 

மனதில் அழியா நினைவாச்சு 


எத்தனையோ வாழ்த்துக்கள் கிடைத்தாலும் 

தந்தையின் வாழ்த்துக்கு ஈடாகுமா என மனம் கணத்தாச்சு 


நாடே இவ்விழாவினைக் கொண்டாடுவதால் 

என்பிறந்தநாளுக்கு இவ்வளவு சிறப்பா என மகிழ்ந்தாச்சு 


என் மனமோ மகிழவில்லை

தந்தை எனும் தெய்வம் காணவில்லை என கவலை சூழ்ந்தாச்சு 


என் மனம் மட்டும் கவலையில் 

ஆயுதபூஜையும் சரஸ்வதி பூஜையும் உன் பிறந்த நாள் என 

சொல்லும் குரல் எங்கோ சென்று மறைந்தாச்சு 


மனம் கணக்கச் செய்து நினைவாச்சு 


நிஜங்கள் நிலைப்பதில்லை 

நினைவுகள் அழிவதில்லை என்பது நிஜமாச்சு 


உயிர் உள்ளவரை 

உன் நினைவே என் தந்தையே

என உணர்வாச்சு 

 

ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நான் கேட்பது

உன் குரலே முதன்மையானதாச்சு 


யாருக்கும் கேட்காதே

எனக்கு மட்டும் கேட்கும் மொழியாச்சு!


அனைவரும் கொண்டாடும் ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் 

என் பிறந்தநாளென மகிழ்ந்தாச்சு..


ஏனோ நான் மட்டும் கலங்குகிறேன்  

தந்தையே  உன் நினைவாலே கலக்கமாச்சு 


தாய் தந்தை சொல்லித்தெரியும் பிறந்த நாள் நமதாச்சு 


ஒவ்வொரு பிறந்தநாளும் தந்தையுடன் கொண்டாட முடியாத நாளாச்சு 

 

இறைவன் படைப்பில்  பிறப்பும் இறப்பும்  இயற்கையானதாச்சு 


இறைவன் கொடுப்பதை தடுக்க முடியாததாச்சு 

 

ஓவ்வொருநாளும் மலர்ந்து புத்துணர்வாச்சு 


தந்தை இல்லாத நாட்கள் வெறிச்சோடியாச்சு


வருடாவருடம் பிறந்தநாள் வரும் என்பது நம்பிக்கையாச்சு 


பெற்றோர் மூலம் நாம் உலகிற்கு வந்தாச்சு 


வாழ்க்கை என்பது பயணமாச்சு 


முடியும் வரை அல்ல நம் கனவை அடையும் வரையாச்சு 


பெற்றோர் ஆசீர்வாதம் பெருஞ்செல்வமாச்சு 


கண்ணுக்குத்தெரியும் தெய்வம் பெற்றோராச்சு 


வணங்கிடுவோம் அனுதினமும் அவர்களின் அன்பினால், பாதுகாப்பினால்  நமக்கு வாழ்க்கை கிடைச்சாச்சு 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்