மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் களிமண்ணாய்..!
Sep 30, 2026,03:47 PM IST
- அ.சுபாலட்சுமி
நாம் செய்யும் பணப் பரிமாற்றம்
அதைப் பெறுபவர்களுக்கு மட்டுமே தெரிந்த காலம் மாறி
இன்று பக்கத்தில் உள்ள அனைவருக்கும் கேட்கும் படி கூவுகிறது
- கைபேசி வழி பணப்பரிமாற்றத்தின் முறை
--
குயவன் பத்து முறை சுற்றும் போது,
அதில் இருந்த களிமண் பானை ஆகிறது.
ஆனால் உலகம் பல முறை சுற்றியும்
மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் களிமண்ணாய்.....!
--
மனிதா,
நீ பிறக்கும் போதும் தனிமை தான்;
இறக்கும் போதும் தனிமை தான்,
இடையில் எதற்குத் துணை?
நீயே உனக்குத் துணை.
--
பிறந்தநாள்:
ஒவ்வொரு வருடப் பிறந்தநாள் அன்றும் நினைக்க வேண்டியவை:
ஆன்மா பழையது,
அதைப் பாதுகாக்கும் உடல் பழையது,
பிறகு உடலைப் பாதுகாக்கும் உடை மட்டும் ஏன்
புதிதாய் இருக்க வேண்டி ஆசைப் படுகிறது இந்த மனம்?
(அ.சுபாலட்சுமி M.Sc,M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தல்)