- பா. பானுமதி
நீரைத் தேடி அலையும் வேர்கள்
சீரைத் தேடி அலையும் பேர்கள்
மழை தேடி வாடும் ஊர்கள்
வேலை தேடி அலையும் ஆண்கள்
சேலை தேடி அலையும் பெண்கள்
விலையைத் தேடி அலையும் கணங்கள்
கலையைத் தேடி அலையும் மனங்கள்
தேடுவதெல்லாம் கிடைப்பதில்லை

கிடைப்பதெல்லாம் நமக்கு எடுப்பதில்லை
என்றாலும் தீராத தேடல்கள்
விருப்பங்கள் வேண்டும் வேண்டுதல்கள்
திருப்பங்கள் தரும் தூண்டுதல்கள்
உணவைத் தேடி உறவைத் தேடி உருக்கமான தேடல்கள்
பணத்தைத் தேடி பகட்டைத் தேடி ஓயாத ஓடுதல்கள்
பெண்ணைத் தேடி பொன்னை தேடி
மண்ணைத் தேடி மாறாத தேடல்கள்
விண்ணைத்தாண்டியும் விட்டு விடாத தேடல்கள்
மண்ணைத் தோண்டியும் முற்று பெறாத தேடல்கள்
கண்ணை மூடியும் கனவிலே தேடல்கள்
இருப்பதிலேயே மனம் லயிப்பதில்லை
இல்லாததை எண்ணி பொறுப்பதில்லை
தேடிக்கொண்டே வாழ்க்கை தீர்ந்துவிடாமல்
ஆடிக்கொண்டே முடிவில் அடங்கி விடாமல்
ஓடிக்கொண்டே நாட்களை ஒழித்து விடாமல்
ரசித்துக் கொண்டே தேடி வாழுங்கள்....
ஒரு நாள் மாறும் மறுநாள் தேடல் தீரும்
(பா. பானுமதி, ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், மதுரை)
A Tribute to Actor Nagesh: தாய் நாகேஷ்!
தேடித் தேடி...!
Cooking Tips: பிரண்டை துவையல்!
விரதம் என்னும் பயிற்சி
Motivational Short story: தேர்வு!
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்.. புரிந்து கொள்ளவும், ஒன்றிணைக்கவும் உதவும் பாலம்!
பொம்மிக்குட்டி.. ஒரு நிமிடக் கதை (23)
மகா கந்த சஷ்டி விரதம் 2026: முருகனே செந்தில் முதல்வனே.. மாயோன் மருகனே!
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
{{comments.comment}}