காட்சிப்படுத்திப் பாருங்க.. நினைத்தது நிச்சயம் நடக்கும்.. எண்ணம் போல் வாழ்க்கை (4)

Su.tha Arivalagan
Nov 25, 2026,05:12 PM IST

- அ.சுபாலட்சுமி


நமக்கு ஓர் விஷயம் நிச்சயமாக கிடைக்க  வேண்டுமென்றால் அதை நாம் ஏற்கனவே அடைந்தது போல் காட்சிப்படுத்த வேண்டும். காட்சிப்படுத்துதல் என்பது நமக்கு தேவையானவற்றை ஏற்கனவே அடைந்துவிட்டால் என்ன நிகழும் என்பதை நம் கண்முன்னே ஓர் நிஜ படமாக, அதை உணர்ந்து பார்க்க வேண்டும். 


ஒரு 3D படம் பார்ப்பது போல. அவ்வாறு பார்க்கப்படும் விஷயத்தை நாம் முழுமையாக எந்தத் தேவையற்ற கேள்விகளுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.


நாம் பிரபஞ்சத்திடம்  ஒரு விஷயத்தைக் கேட்குறதுக்கு முன்னால் அதுநாள்வரை நமக்கு நடந்த நல்ல விஷயங்களை நினைத்துப் பார்க்கணும். உங்களுக்குப் புரியுற மாதிரி சொல்லணும்னா, நீங்க இரண்டு நண்பர்களுக்கு இரண்டு பரிசு வாங்குறீங்க. அத அவங்ககிட்ட கொடுக்குறீங்க. அதுல முதல் நண்பன் வாங்கிட்டு உங்களுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு போயிடறான்.


இரண்டாவது நண்பன் அந்தப் பரிசை வாங்கினதும் நன்றி சொல்லிட்டு அதைப் பிரித்துப் பார்த்து அதோட அழகை ரசிச்சு மனசார நன்றி சொல்லுறான். அடுத்த முறை நீங்க யாருக்குப் பரிசு வாங்கிக் கொடுப்பீங்க? 




நன்றியுணர்வு


இதுதான் நன்றியுணர்வு. இதேபோலதான் நீங்க உங்களுக்குக் கிடைத்திருக்கும் பரிசுக்கு மனதார பிரபஞ்சத்துகிட்ட நன்றி சொல்லிப் பாருங்க. நிச்சயமா இந்த பிரபஞ்சம் உங்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும்.


இன்னோரு விஷயம் நீங்க கவனிச்சிருப்பீங்க. அதாவது நீங்க ஒரு விஷயத்தைப் பற்றி நினைக்கும்போது அது தொடர்பான ஏதோ ஒரு சில விஷயங்கள் உங்க கண்ணுல தென்படும். அப்போ நீங்க என்ன நினைப்பீங்க? நானே அது கிடைக்கல்லைனுதான் கவலைப்பட்டுகிட்டு இருக்கேன் அதுவே என் கண்ணுலபட்டு என்ன கடுப்பேத்துதேன்னு நினைப்பீங்க, சரிதானே?


ஆனா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா? இது, உங்களுக்கு நிச்சயமா அது வேண்டுமான்னு பிரபஞ்சம் உங்ககிட்ட கேட்கிற கேள்வி? அதனால் இனிமேல் அந்த மாதிரி பார்த்தா ''ஆமாம் எனக்கு வேண்டும்; இல்லை எனக்கு வேண்டாம்'' என்று பதில் சொல்லுங்க. அதுக்கான பலன் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். 


(தொடரும்)


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)