Subhalakshmi on her Drawings: ஓவியமும் நானும்!
- அ.சுபாலட்சுமி
எனக்கு சிறு வயதிலிருந்தே ஓவிய கலை மீது ஆர்வம் அதிகம். மாயை ஓவியம் ( illusion art), மண்டலா ஓவியம், புள்ளி ஓவியம் (pointalism art), oil pastel , 3d art, dot painting, coffee painting, resin art, tanjavur painting போன்று பல ஓவியங்கள் வரைவேன்.
இன்று அதில் நான் வரைந்த சில மண்டேலா ஓவியங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
முதலில் மண்டலா கலை என்றால் என்ன?
மண்டலா கலை (Mandala Art) என்பது ஒரு மையப் புள்ளியைச் சுற்றி சமச்சீராக வட்ட வடிவில் வரையப்படும் அழகிய வடிவியல் கலை வடிவமாகும்.
'மண்டலா' (Mandala) என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு "வட்டம்" என்று பொருள். இது பிரபஞ்சத்தையும், வாழ்வின் முழுமையையும் குறிக்கிறது.
மண்டலா கலையின் நான் அனுபவித்த சிறப்புகள்:
அமைதி மற்றும் கவனம் இதில் பிரதானமாக நமக்குக் கிடைக்கும். இதை வரையும்போதும் பார்க்கும்போதும் மனம் அமைதியடைந்து, ஒருமுகப்படும்.
சமச்சீரான வடிவத்தில் ஓவியம் இருக்கும். மையத்தில் தொடங்கி சீரான அடுக்குகளாக வெளிப்புறம் வரை சமச்சீராக இது விரிவடைகிறது.
இயற்கையில் மண்டலா வடிவங்கள்
பூக்களின் இதழ்கள், சூரியன், நீர்த்துளிகள் மற்றும் சிலந்தி வலைகள் போன்ற இயற்கையான பல பொருட்களில் இந்த வட்ட வடிவியல் அமைப்பு காணப்படுகிறது.
இது ஓர் வகையான தியானம் என்றே நான் கூறுவேன், காரணம் ஓர் சிறு மண்டலா ஓவியம் வரைய குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாகும். ஒரு மணி நேரம் எந்த வித சிந்தனைகளும் இன்றி ஒரே கவனத்தில் வரைய வேண்டும். கலர் மண்டலா, கருப்பு வெள்ளை மண்டலா, போர்ட் மண்டலா, 3D மண்டலா போன்றவை எனக்கு வரைய பிடிக்கும்.
ஓவியம் நமது மனதை சாந்தப்படுத்தும், ஒருமுகப்படுத்தும், நம்மை ஸ்திரப்படுத்தவும் செய்யும். ஓவியம் வரையக் கற்றுக் கொள்ளுங்கள்.. அது உங்களை மேலும் அழகாக்கும்.
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தல்)