- சுதா திருநாராயணன்
வாசலில் கோலம் இட்டுக் கொண்டிருந்த மனைவி கல்பனாவை ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தான். நீலமும் ஆரஞ்சுமாய் கோலத்தில் வண்ணங்கள் வாரி இறைந்து கொண்டிருந்தன.
எவ்வளவு அழகாக கோலம் இடுகிறாள். வசதி இருந்தால் அவள் கைகளுக்கு வைர வளையலே அணிவித்து அழகு பார்க்கலாம். இப்போதைக்கு கோலம் இடும் கரங்களுக்கு ஒரு முத்தத்தையாவது பரிசாக தரலாம் என்று நினைத்தான்.

கணவன் தன்னையே நோக்குவதை உணர்ந்த கல்பனா, “ என்ன பார்வை வேண்டி கிடக்கு இங்க? குக்கர் நாலு விசில் விட்டாச்சு. பேப்பர மடிச்சு வச்சுட்டு நீங்களும் குளிச்சு பாப்பாவையும் குளிக்க வையுங்க. கேஸ் அடுப்ப அணைங்க. துவைக்க வேண்டிய துணிகளை சோப்பில் ஊற வையுங்க.எப்ப பாரு சோம்பேறித்தனமா உக்காந்துகிட்டு” என்று பொரிந்தாள்.
“கேஸ் அடுப்ப அணைச்சா சுடும்." தன் எண்ணம் நிறைவேறாத ஆசையில் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே கூறிவிட்டு மனைவியின் ஆணைகளை நிறைவேற்ற தொடங்கினான் கல்பனாவின் கணவன்.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
சிறு துளியின் பெரும் பயன்!
உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!
அறன் வலியுறுத்தல்
என் இறைவன்!
ஒரு கைப்பிடி நம்பிக்கை!
ஐந்து கரத்தனை.. யானை முகத்தனை.. விநாயகர் துதியின் பொருள் என்ன தெரியுமா?
Sudha Thirunarayanan Cute Story: கோலம்!
மல்லிகைப் பூ.. அல்ல அல்ல.. மாயப்பூ!
விரல்களும், ------- மும்!
{{comments.comment}}