A Thomas Poem: உழவு!

Su.tha Arivalagan
May 06, 2026,11:04 AM IST

- அ.தாமஸ்


இவ்வுலகையே உருமாற்றிய உன்னதம்! 

காடும் மேடும் கழனியாக உருமாற தன் உதிரம் கொடுத்தது! 

கழனியில் விழுந்த வித்தை வியர்வையால் விளைவித்தது! 

விளைச்சலால் உலகு வாழ உணவு சமைத்தது! 


உணவு படைத்தவன் தான் உலகைப் படைக்க நல்லறிவு சமைத்தான்!

உணவு படைத்த உழவு இல்லையேல் இவ்வுலகு இல்லை என உலகுக்கு உணர்த்தினான்!

உலகத் தொழில்கள் பலவற்றுள் உழவுத் தொழிலே உயர்ந்ததென உலகு கண்டது!

அறிவியலும் ஆன்மீகமும் அறிதான காலத்தில்  உழவே உயர்வாய் நின்றது!




இன்று அறிவியலையும் ஆன்மீகத்தையும் அறிவால் வெல்லலாம் என்ற எண்ணம் விரவி நிற்கிறது!

அறிவுக்கு அடித்தளம் உழவும் உணவுமென உணர மறுக்கிறது!

அறிவியல் உழவின் வடிவத்தை மாற்றும் உணவு சமைக்காது! 

இந்நிலை உணராமலே உழவு இல்லால் உணவு சமைக்க நினைக்கிறது! 


உலகத் தொழிலுக்கு உழவே உயிர் நாடி! 

உணர்ந்தவன் தான் உயர்கிறான் அதை நாடி! 

அதை மறந்தவனோ உணவுக்கு அழைகிறான் தினம் தேடி!

உழவைத் தொலைத்து விட்டு உணவைத் தேடாதே! 


உயிருக்கு உணவும் உலகுக்கு உழவுமே அடிப்படை -என 

உணர்ந்து உணவால் உயிரையும் உழவால் உலகையும் உயர்த்திடு.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)