சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!

Su.tha Arivalagan
Jun 05, 2026,05:08 PM IST

- அ.தாமஸ்


நமக்கு உதவ நல் உறவு தேவை. ஆனால் நமக்காக செபிப்பதற்குத் தான் உறவினும் மேலான ஒரு இதயம் தேவை.


நாம் கேட்காமலே உதவும் உறவுகள் உயர்வானவர்கள் தான்; ஆனால் அதைவிட உயர்வானவர்கள் நாம் சொல்லாமலே நம் தேவைகளுக்காகச் செபிப்பவர்கள்.




கேட்டால் உதவும் உறவுகளை சம்பாதிப்பதை விட நாம் கேட்காமலே நமக்காக செபிக்கும் உறவுகளை சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுவோம். ஆம் மனித உதவி தேவைக்கு கொடுக்கும் இறை உதவியோ தேவையான அனைத்தையும் கொடுக்கும்.


உதவி இவ்வுலகில் இன்பத்தை கொடுக்கும் செபம் மட்டுமே அதனினும் மேலான உள்ள நிறைவைக் கொடுக்கும். எனவே உதவும் உறவை உயர்வாய் நினைப்போம்; செபிக்கும் மனதை நம் இதயத்திற்கு இதமாய் நினைப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)