சிந்தனைச் சிதறல்.. விழிப்போடு இருப்பவர்களே வெளிச்சத்தைக் காண்கிறார்கள்!

Su.tha Arivalagan
Jul 21, 2026,01:44 PM IST

- அ. தாமஸ்


விழிகளோடு இருப்பவர்கள் எல்லாம் வெளிச்சத்தைக் காண்பதில்லை; விழிப்போடு இருப்பவர்களே வெளிச்சத்தைக் காண்கிறார்கள். 


பார்வையுடைய நாம் நம் பலத்தை அறியாததால் தான் பார்வையுள்ள பலரிடம் பார்வை இழந்தவராய் தன்னையே இழந்து நிற்கிறோம்.


எதையும் தாங்கும் இதயம் வேண்டும்தான் அதே நேரத்தில் விழிப்போடு இருந்தால் ஏமாற்ற நினைப்பவரிடம் கூட விட்டுக் கொடுத்து இதையும் கடந்து பல இதயம் இணைத்து இமயம் தொடலாம். 




விழிப்பாய் இருப்பவனுக்கு விழி கடந்து ஒவ்வொரு அங்கமும் உள் உணர்வால் விழித்து வழியாகிறது. விழிப்பை இழப்பவனுக்கு விழி கூட தன் நிலை இழந்து எதற்கும் இன்றி சுமையாகிறது. 


இங்கு பார்வையற்றவன் விழியை இழப்பவன் அல்ல மாறாக தன் விழிப்பை இழப்பவனே. எனவே விழிப்போடு நம் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் விழியாய் மாற்றும் நிலைதனை ஏற்றால் நம் விரல் நுனி கூட  கருத்தாய் காவல் காக்கும் கருவிழியாகும்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)