சிந்தனைச் சிதறல்.. தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்!

Jul 20, 2026,05:13 PM IST

- அ.தாமஸ்


ஒன்றை துவங்குவதற்கு முன் பலமுறை யோசித்து துவங்குவதும் துவங்கியதை முறையாய் முடிக்க முனைவதும் முறையே . ஆனால் தவறான ஒன்றைத் துவங்கி விட்டு அது தவறு என அறிந்தும் துவங்கி விட்டோமே என்பதற்காக தவறாகக் கூட முடித்து விடலாம் என்று நினைப்பது அனைத்திலும் ஆபத்தானது. இத்தகு நிலையில் தவறானதைத் தொடர்வதைவிட தவறென உணர்ந்ததை  அந்நிலையிலேயே துண்டிக்கத் துணிவதே உயர்வானது.


எந்த ஒன்றையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி! செயல்படுத்திவிட்டு சிந்தித்தால்  அனுபவம்! சிந்திக்காமலே தொடங்குவதும் தொடர்வதுமே அவமானம்.




தன் மதிப்பு என்பது பிறரின் உணர்வுகளை சிதைத்து உருவாக்கப்படுவதல்ல;மாறாக அவர்களை மதித்து அவர்களின் உணர்விலும் உறவிலும் ஒன்றி அவர் நிலையில் உயர்வதேயன்றி வேறில்லை.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்