- அ. தாமஸ்
போலியான உறவுகளின் போலிப் புன்னகையுடன் பயணிப்பதை விட தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது.
தன் மதிப்பை உணராத இடத்தில் தன்னிலை இழந்து பயணிப்பது பயனற்றது அத்தகு இடங்களில் பயனற்றவர் என்ற அடையாளத்தோடு ஒதுங்கி இருப்பது கூட உயர்வானதும் மன நிறைவானதுமே.
எவர் ஒருவர் நமது உணர்வுக்கும் உறவுக்கும் மதிப்புக் கொடுத்து உயரிய நல் உறவாய் மதிக்கிறார்களோ அவர்களே உண்மையான நண்பர்கள்; நாம் நேசிக்கிறோம் என்பதற்காக மட்டுமே அவர்கள் நம் நண்பர்களாக முடியாது.

பழைய கசப்பான நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைக்காதீர்கள்; அது உங்களின் சிரிப்பையும் சிறப்பான வாழ்வையும் சிதைக்கும்.
நம் வலியை தன் வலியாய் உணரும் உறவே இவ்வுலகில் உயர்வானது .அத்தகு ஒரு உறவு கிடைத்து விட்டால் நாமே இவ்வுலகில் உயர்வானவர்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
தோஷங்கள் தொற்றிட தேசங்கள் தோற்றது மண்ணே
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
Everything had beauty.. ஆனால் எல்லோராலும் காண முடியாதது!
ஆடி மாதம் அம்மன் மாதம்
Short Story: கிணறு ஒரு சுகம்!
ஆடி வெள்ளி!
{{comments.comment}}