சென்னை:தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு மாவட்டங்களில் இரவு முழுதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. மற்றொரு புறம், அரபிக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வானிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளது.
அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலைக் கொண்டுள்ளது. இது அடுத்து வரும் 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 21-ஆம் தேதி இது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து, அக்டோபர் 22-ஆம் தேதி சோமாலியா கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடி, மின்னலுடன் விடிய விடிய பெய்த கனமழை :
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கிய மழை இரவு முழுவதும் இடைவிடாது பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை:

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. புதுச்சேரி நகரப் பகுதிகளான கடற்கரைச் சாலை, உப்பளம், நெல்லித்தோப்பு, ராஜ்பவன் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய இடங்களில் அதிகளவில் மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதி மற்றும் திருநள்ளாறு, நெடுங்காடு, நிரவி, திருப்பட்டினம், கோட்டுச்சேரி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த இந்த மழையின் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலின் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
எச்சரிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
பருவமழை தீவிரமடைந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வாழும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரபிக்கடல் பகுதியில் நிலவும் மாறுபட்ட வானிலை சூழல் காரணமாக மீனவர்கள் கடல் பகுதிகளுக்குச் செல்லும் போது வானிலை மையத்தின் எச்சரிக்கைகளைக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென்தமிழ் தலையங்கம்: "ரெட், மஞ்சள், ஆரஞ்சு" - வானிலை அலர்ட்டுகளும், மக்களின் விழிப்புணர்வும்!
இன்று முதல் சென்னையில் மழை தீவிரமடையும் : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
பணம் எனும் மாயவன்!
நகைப் பெட்டி!
கேஷாவின் சிறகடித்த தருணம்!
சதுர கிணறும் புளிய மரமும் பின்னே அமெரிக்கன் கல்லூரியும்!
எண்ணிப் பார்!
அன்பெனும் அம்பு
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
{{comments.comment}}