- சு.தா.அறிவழகன்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட்.. கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.. சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் என்று அடிக்கடி செய்தி பார்க்கலாம். மழைக்காலம் வந்தாலே இந்த அலர்ட்டுகளும் கூடவே வந்து கொள்ளும்.
வானிலை மையம் கொடுக்கும் இந்த எச்சரிக்கைகள் வெறும் செய்திகள் அல்ல; நம் பாதுகாப்பிற்கான வழிகாட்டிகள். ஆனால், இந்த எச்சரிக்கை வண்ணங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான அர்த்தம் என்ன என்பதைப் பல நேரங்களில் நாம் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. பலருக்கு இது தெரிவது இல்லை.
சிலர் இதை சரியாக பொருட்படுத்துவதில்லை. அவங்க எப்பவுமே இப்படித்தான் ரெட் அலர்ட் கொடுப்பார்கள்.. ஆனால் மழையே வராது என்று அலட்சியப்படுத்துபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அப்படி மெத்தனமாக இருக்கக் கூடாது. அலர்ட் என்பதே, வந்தாலும் வரலாம், தற்காப்புடன் இருங்கள் என்பதற்காகத்தான். வராவிட்டால் நல்லது.. ஆனால் வந்து விட்டால் என்ன செய்வது.. ?
சரி இந்த அலர்ட்டுகள் உணர்த்தும் உண்மை என்ன, எதற்காக கலர் கலராக அலர்ட் கொடுக்கிறார்கள்?
வானிலையின் தீவிரத்தைப் பொறுத்தும், அதனால் வரக்கூடிய ஆபத்தின் அளவைப் பொறுத்தும் இந்த வண்ணங்கள் பிரிக்கப்படுகின்றன.
மஞ்சள் எச்சரிக்கை (கவனமாக இருங்கள்):
.jpg)
வானிலையில் மாற்றம் நிகழப் போகிறது என்று அர்த்தம். உடனடி ஆபத்து இல்லை என்றாலும், நிலைமை மாற வாய்ப்புள்ளதால் வானிலை மையத்தின் செய்திகளைக் கவனித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் அலர்ட் இது.
ஆரஞ்சு எச்சரிக்கை (தயாராக இருங்கள்):
கனமழை அல்லது பலத்த காற்று வீசக்கூடும். மின்சாரம் துண்டிக்கப்படுவது, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பது போன்ற இடையூறுகள் வரலாம். அதனால் தேவையான அத்தியாவசியப் பொருட்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அலர்ட் கொடுக்கிறார்கள்.
சிவப்பு எச்சரிக்கை - ரெட் அலர்ட் (ஆபத்து):

மிகவும் மோசமான, ஆபத்தான வானிலை நிலைமையைக் குறிக்கிறது. அதி கன மழை பெய்யும். இடி மின்னலுடன் கூடிய பெருமழை பெய்யும் என்பதால், வெளியில் நடமாடினால், உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து வரக்கூடும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது. அரசு சொல்லும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படக் கூடும் என்பதையும் இந்த அலர்ட் உள்ளடக்கியுள்ளது.
நாம் என்ன செய்ய வேண்டும்?
இயற்கையின் சீற்றத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், முறையான முன்னெச்சரிக்கை மூலம், தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் பெருஞ்சேதங்களைத் தடுக்க முடியும்.
பொதுவாகவே, மழைக்காலத்திற்கு முன்பே நாம் ஆயத்தமாகி விட வேண்டும். குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முக்கியமான சான்றிதழ்கள், சொத்துப் பத்திரங்கள், பாஸ்போர்ட், வங்கி அட்டைகள், ஆதார் அட்டைகள், படிப்புச் சான்றிதழ் என முக்கியமான அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல தேவையான சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பெருமழைக்காலங்களில் பலர் வீடுகளை விட்டு வெளியேற நேரிடலாம். அதுபோன்ற சமயங்களில் இந்த முன்னெச்சரிக்கை நமக்கு உதவும்.
வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கிறது என்றால், அதை அலட்சியப்படுத்தாமல் முன்னெச்சரிக்கையோடு இருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். சரியான விழிப்புணர்வும், தேவையான முன்னெச்சரிக்கையும் இருந்தால் எந்தவொரு இயற்கை இடர்பாட்டையும் நம்மால் பாதுகாப்பாக எதிர்கொள்ள முடியும்!
Yasmin Cooking Tips: பாசிப்பருப்பு + பச்சரிசி கிச்சடி செய்வது எப்படி?
தென்தமிழ் தலையங்கம்: "ரெட், மஞ்சள், ஆரஞ்சு" - வானிலை அலர்ட்டுகளும், மக்களின் விழிப்புணர்வும்!
இன்று முதல் சென்னையில் மழை தீவிரமடையும் : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
பணம் எனும் மாயவன்!
நகைப் பெட்டி!
கேஷாவின் சிறகடித்த தருணம்!
சதுர கிணறும் புளிய மரமும் பின்னே அமெரிக்கன் கல்லூரியும்!
எண்ணிப் பார்!
அன்பெனும் அம்பு
{{comments.comment}}