சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!

Su.tha Arivalagan
Jun 20, 2026,03:50 PM IST

- அ. தாமஸ்


வளமைக்கு ஒரு காலம் என்றால் வறுமைக்கு ஒரு காலம் மகிழ்ச்சிக்கு ஒரு காலம் என்றால் சோகத்திற்கு ஒரு காலம் இதுவே வாழ்வின் எதார்த்தம் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் நாம் தான் வாழ்நாள்  முழுமைக்கும் துன்பங்களைத் தூக்கி சுமக்க வேண்டி இருக்கும்.




எதார்த்தத்தை அதன் நிலையிலேயே ஏற்றுக் கொள்ளப் பழகும் போது தான் மாற்றம் நம்மில் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமையும். கோலமிட்ட இடத்தில் அக்கோலத்தை அழிக்காமல் மற்றொரு கோலத்தை அமைக்க முடியாத தானே அவ்வாறு அமைத்தால் நிச்சயமாக அது கோலமாக இருக்காது மாறாக அலங்கோலமாகத் தான் இருக்கும். 


அழகான வாழ்க்கை அழிகிறது என்றால் அதனினும் அழகான ஒரு வாழ்க்கை நமக்காக காத்திருக்கிறது என்பதுதான் எதார்த்தம். எனவே நாளைய வளமான வாழ்க்கையை வாழ விரும்பும் நாம் இன்றைய அழகான வாழ்க்கையில் ஏற்படும் அதிரடி மாற்றங்களை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)