சிந்தனைச் சிதறல்.. கற்பனையில் களிப்பதை விட உள்ளதை ஏற்பதே மகிழ்ச்சி!

Jun 17, 2026,11:14 AM IST

இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து கற்பனையில் களிப்பதை விட உள்ளதை உள்ளபடி ஏற்று அதன் நிலையில் மகிழ்வதே சிறப்பு.


செல்வச் செழிப்பில் திளைப்பவரும் கூட வயிறைத் தாண்டி உண்ணவும் முடியாது உடலைத் தாண்டி உறங்கவும் முடியாது என்பதை உளப்பூர்வமாய் ஏற்றாலே எதுவும் இல்லை என்ற நிலையே இல்லாமல் போய்விடும்  நம்மில். 


இறைமையில் உறைந்திட இருப்பதில் நிறைவதே உயர்ந்த நல் ஆயுதம். எனவே இல்லையே என்று அங்கலாய்ப்பதை விட இருக்கும் ஒவ்வொன்றையும் நினைத்து பேர் உவகை கொள்வோம். 




மனக்குறையோடு மாட மாளிகையில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சி என்பதை அனுபவிக்கவே முடியாது. உணவிற்கும் உடைக்கும் உறையுளுக்கும் கூட நிரந்தரம் இல்லாமல் நிற்கதியாய் வீதியில் வசிக்கும் ஏழையிடம் இருக்கும் நிறைவில் எவ்வளவு இருக்கிறது நம்மில்?யோசிப்போம்;பிறரிடம் எதற்கும் யாசிக்காமல் வாழும் இவ்வாழ்வை நேசிப்போம். ஆம் இதுவே இறைவனின் உயரிய வரம் தானே.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்