வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!

Aug 03, 2026,05:15 PM IST

- பி.எஸ். முருகேசன்


குயில் வந்து 

கூவும் என்று


கூட்டை விட்டு 

பறந்து வந்தேன்


காகம் வந்து 

அமர்ந்து கொண்டு


கத்திக் கரைகிறது 

கூட்டமாக சேர்ந்து 


காட்டத்தோடு கூட்டை 

களைத்துவிட எண்ணுகிறேன்


பாவம் அதுவென்றே

பரிதாபம் கொள்ளுகிறேன்


கோபம் குறைந்து

குளிரும் மனசு




குயில் இடும் 

முட்டைக்கும் சேர்த்து


அடை காப்பதும் 

காகம் தானே


என்று விடைபெற்றேன் 

வேறு இடம்


மயில் ஆடும் 

சோலையிலே


மானும் துள்ளி 

ஆடுதே


ஓடும் நதி

ஓசையிலே


தோடி ராகம் 

கேட்குதே


பறவைகளின் சத்தம் 

பாங்காக ஒலிக்குதே


பழங்கள் உண்ண 

பறவை எச்சத்திலே


விதை கிடந்து 

முளைக்குதே


விதை முளைத்து 

விருட்சமாக


பறவைகளும் வசிக்குதே


வான் மழையும் 

காற்றும் தந்து


வாழ்வு கொடுக்கும் 

மரங்களே


மரம் வளர்ப்போம் 

மழை பெறுவோம்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

news

Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

news

முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!

news

மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

அதிகம் பார்க்கும் செய்திகள்