- பாவலர் மாயோன் மங்கை
காவிரியின்
கரையோரம்
கண்களிலே
காதலதைச்
சொன்னதும்
வைகறைப்
பொழுதினிலே
வாசலிலே
நேசமாகப்
பார்த்ததும்
திருவிழாக்
கூட்டத்திலே
இருவருமாகப்
பேசிப்பேசிச்
சிரித்ததும்
கைகளால்
சிறையிட்டு
கன்னத்தில்
முத்த மழை
சிந்தியதும்

மழையில்
செடியடியே
கிளையாட்டி
நனையவே
செய்ததும்
கோவிலிலே
காதலுக்காய்
காத்திருந்து
கண்டதுமே
கனிந்ததும்
பரிசாக
தாவணியைத்
தந்ததுமே
அழகாக
அணிவித்ததும்
செல்லுமிடம்
சிலையாகவும்
நிற்குமிடம்
நிழலாகவும்
நினைவானவனே
நிசமாக
நெஞ்சிலே
சுமந்திருந்த
நாட்களை
எண்ணுகிறேன்
அலையிலே
மிதக்கும்
துறும்பாக
ஆடுகிறேன்
அழுகிறேன்
பிரியாத
பிரியங்களைப்
பிரித்தெடுத்து
பித்தாக்கிய
பிரியமானவனே
வெள்ளத்தில்
விட்டதேனடா
பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்பு?
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
Spiritual Facts: நடு நெற்றியில் ஏன் பொட்டு வைக்கணும் தெரியுமா?
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
Short Story: ஒரு பெரிய கெடா பூனை!
{{comments.comment}}