வாசித்த இதயத்தில் யாசிக்க வந்த வரிகள் நீ

Aug 03, 2026,10:29 AM IST

- பசுங்கிளி


மனிதப் பிறவியின் மாபெரும் பொக்கிஷம் நட்பு

நட்பின் ஆழம் அளவிட முடியாதது


ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்

தேடினாலும் கிடைக்காத ஒரு சொந்தம் நம் நட்பு


பூக்களுக்கு பேசத்தெரியாது, தெரிந்திருந்தால்

சொல்லி விடும் உன்னைப்போல் ஒரு தோழி இல்லையே


இருந்திருந்தால் தினம் தினம் நான் வாடாமல்

இருந்திருப்பேன் என்று


நட்பு என்பது, இரவில் தோன்றும் நிலவும் அல்ல

பகலில் தோன்றும் சூரியனும் அல்ல

என்றும் நிலைத்து இருக்கும் வானம்




வாசித்த இதயத்தில் யாசிக்க வந்த வரிகள் நீ

நேசித்த இதயத்தில் சுவாசிக்க வந்த நட்பு நீ


நண்பர்கள் இல்லா வாழ்க்கை வெறுமைதான்


நான் சிரிக்கும் போது நீயும் சிரிப்பாய்

நான் தோல்வியுறும் போது எனக்கு தோள் கொடுப்பாய்

நான் சொல்லாமலே என்துன்பங்களை அறிவாய்

என் கண்களை பார்த்து என் பசியாற்றுவாய்


நான் தவறு செய்தால் தட்டி கேட்பாய்

என் தலையை வருடி கட்டி அணைப்பாய்

நான் கலங்கும் போது, நான் இருக்கேன் என்று தைரியம் கொடுப்பாய்

உன் மடியில் சாய்ந்தால் என் மனம் பூவாகும்

உன்னில் என் தாயை உணர்வேன்

நல்ல தோழியும் ஒரு தாய்தான்


நல்ல நட்பு இயற்கை தந்த வரம்

நல்ல நட்பு கிடைப்பது பெரிது

அலட்சியப் படுத்தினால் மீண்டும் கிடைப்பது அரிது

நட்போடு வாழ்வோம் நலமாக வாழ்வோம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

news

Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

news

முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!

news

மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்