- அமிர்தம் ரமேஷ்
அறிமுகம்
இல்லாமல்
ஆறில்
இணைந்தோம்
ஆதரவுடன்
பழகி நட்பு கொண்டோம்
இதயங்களுக்குள் அன்பை ஆழமாய்
நிறைத்தோம்
விரல்கள் கோர்த்து
ஆனந்தமாய் விளையாடினோம்
குட்டிக் குட்டி கதைகள் பேசி மகிழ்ந்தோம்

உணவுகள்
நிறைவாய் பகிர்ந்து உண்டோம்
இன்பத்தில் இணைந்து
சிறுபிள்ளைகளாய்
குதித்தோம்
சோகத்திலும் இணைந்து ஆறுதல்
பகிர்ந்தோம்
படபடக்கும் பட்டாம்பூச்சிகளாய் வலம் வந்தோம்
எத்தனை வண்ணங்கள்
நம்மில் கண்டோம்
அத்தணையிலும் வண்ணங்கள்
மிளிரக் கண்டோம்
கல்வி என்னும் பெருங்கடலில் மூழ்கினோம்
அறிவென்னும் முத்தை ஆசிரியர்களிடம் பெற்றோம்
பாசமும் நேசமும் பகிர்ந்த
நினைவுகள்
மனதில் இனிய நினைவுகளாய் நிறைத்தோம்
நெஞ்சம்
கணக்கிறது
விழிகளின் ஓரம்
கண்ணீர்த்
துளிகள்
எட்டிப் பார்க்கிறது
உறங்கினாலும் உறங்கிப்
போகாத நம்
அழகிய
பள்ளிக் கால நினைவுகளை
மீட்டிப் பார்த்த
மகிழ்வு
சிந்தனை இன்று சிறகுகளாக பறக்கிறது
பள்ளி கால நினைவுகள்
அழகானது
தோழிகளுக்காக
நட்பு
கவிதையொன்று
நினைவுகள்
இதயத்துள்
நித்தம்
புது மலராய்
மலரும்
நம் பள்ளி பயின்ற நாட்கள்
கடந்தாலும்
நினைவுகளை நினைக்கும்
நிமிடம்
சிறகுகள் இன்றி
விண்ணைத் தொடலாம்
சுவாசம்
நிறுத்தி
ஆழ்கடல்
தொடலாம்
தோழிகுரல்
செவி சேர
வலிகள் கூட தொலைந்து
போகும்
நட்பு மலர
ஒரு சிறு
புன்னகை போதும்
துவண்டு
விழும்போது
நட்பென்னும் மலர்க்கரம்
தாங்கிபிடிக்கும்
உயிர்வலியை உணரும்
தருணம்
உரிமையுடன்
உடன் நின்று தோள் தந்து ஆறுதல் தரும்🌹
தொலைவில்
இருந்தாலும்
கைபேசி ஆறுதலே
கோடி...கோடி...
பலம் தரும்
மனதிற்க்கு மகிழ்வைத்தரும்
நலம் சிறக்கவேண்டி
மன்றாடும்
ஆண்டவனை
தினம் தினம்
வேண்டி நிற்கும்
இரத்த பந்தம் இல்லை...
உறவின் சொந்தம்
இல்லை...
உணர்வுப்பூர்வமாய்
உலம் மகிழ உதிப்பது
நட்பூ
நட்பூ வரும் வரை
இருக்கும்
ஏக்கம்
வந்த பின் மாறும்
ஆனந்தமாக
சுவாசம்
உள்ளவரை
சுகம்தரும்
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
Short Story: ஒரு பெரிய கெடா பூனை!
முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
{{comments.comment}}