சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
- அ.தாமஸ்
பிரச்சனைகளை பிரச்சனைகளாக பார்ப்பவர்கள் அவ்விடத்திலேயே நின்று விடுவார்கள். அதே நேரத்தில் அதை பெரு வாய்ப்பாகப் பார்ப்பவர்களே நின்ற இடத்திலேயே வென்று விடுகிறார்கள்.
பிரச்சனைகளை சந்திக்காத மனிதர்கள் இல்லை பிரச்சனைகளை சந்திக்கவில்லையெனில் அவர்கள் மனிதர்களே இல்லை. நாம் பல நேரங்களில் பலரும் சிந்திக்கவே முடியாத விடயங்களை சாதனையாக்கி இருக்கிறோம் என்பதை சிந்திக்க மறந்து விடாதீர்கள்.
உங்களையே உற்று நோக்குங்கள் உள்ளொளி உங்களுக்குள் இருந்தே பிரகாசிக்கிறது. வெற்றிக்கான உள்ளொளியை நம்முள் தேடாமல் வெளியில் தேடுவதால் தான் பல நேரங்களில் தோற்றுப் போகிறோம் உதவிட ஒருவரும் கரம் கொடுக்கப் போவதில்லை நாமாக எழாதவரை.
"வா பார்த்துக்கொள்ளலாம் என்று துவங்கி விடு பார்த்துக்கொள்ளலாம்"என்று வாழப் பழகிவிட்டால் எதிரே நிற்கும் எரிமலை கூட அறிய வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் எடுத்துக்கொள் எல்லாம் உனக்குத்தான் என்று.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)