சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

Su.tha Arivalagan
Aug 19, 2026,12:20 PM IST

பணம், அது ஒரு வெற்றுக் காகிதம். அதுவே, உழைப்பின் மதிப்பை உணர்த்தித் தானும் உயரும் உயர் சாதனம். அது, தேவையால்  நிறைப்பவருக்கு மதிப்புக்குரியதாகவும், தேவையைக் குறைப்பவருக்கு மதிப்புக் குன்றியதாகவும் தன்னை அடையாளப்படுத்துகிறது.


"பணம் தேவைக்குப்  பயன்படுத்துபவரைப் பாதுகாக்கிறது, தேவைக்கு மிகுதியாய்ப் பாதுகாப்பவரையோ, பயன்படுத்துபவரையோ பலவீனப்படுத்துகிறது". எனவே தேவையைக் குறைப்போம், அத் தேவையையும் சேவையால் நிறைப்போம்.




பணம் கொடுத்து உயிர்வளியை வாங்கலாம். ஆனால், உயிரை வாங்க முடியாது. சில நேரங்களில் உயிரின் பிரிவைத் தடுத்தாலும், சில உறவுகளின் பிரிவைத் தடுக்கவே முடியாது. எனவே, உணர்வற்ற பணத்திற்காக உணர்வுநிறை உறவை இழந்து விடாதீர்கள்.


வாழ்வில் செல்வத்தை சேமிப்பதை விட, பலர் மனங்களில் செல்வாக்கை சேமிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துங்கள். செல்வம் குறையும்பொழுதும் செல்வாக்கே உங்களை உயர்த்தும்; உங்களை மகிழ்வால் தினம் நிறைத்து,  மனக்குறை உடன் களைக்கும்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)