Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
- அ. தாமஸ்
ஏன்? எப்படி?எதற்கு? இந்த ஆகச்சிறந்த வார்த்தைகள் தான் இவ்வுலகை உயிர்கள் வாழ தகுதிப்படுத்தி இருக்கிறது.
இவ்வார்த்தைகளைத் தேவைக்குப் பயன்படுத்தினால் உறவுகளைப் படைக்கும் இல்லையேல் உறவுகளை உடைத்து அவர்களின் உணர்வுகளையும் சிதைக்கும். எனவே கவனமாய் இருப்போம் இவ்வார்த்தைகளைக் கையாள்வதில்.
என்ன ஆயிற்று? என்று கேட்க மாட்டார்களா என்று எதிர்பார்க்கும் உற்றோரிடமும் நம் பெற்றோரிடமும் கேட்க மறுக்கும் பலருக்கோ அதை கேட்கவே விரும்பாத மற்றோரிடம் கேட்பதில் எவ்வளவு ஆனந்தம்? நம் தகுதி அறியாமல் பிறரைப் பற்றி அறிய நினைப்பது அவசியம் இல்லை தானே.
வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அவை நல்லவையாகவும் கெட்டவையாகவும் அடையாளப்படுத்தப் படுகிறது.
"மிக்க மகிழ்ச்சி"என்ற வார்த்தையை பிறப்பில் ஏற்கிறோம் இறப்பில் ஏற்கிறோமா? எனவே வார்த்தைகளை வைத்து வாதம் செய்யாமல் அதன் அவசியம் குறித்தும் அறிவதே சிறப்பு.
விதை எத்தகையது என்று விளைச்சலே தீர்மானிக்கிறது. அது போலவே நாம் பேசும் வார்த்தைகளும் எத்தகையது என்பதை அதன் விளைவுகளே தீர்மானிக்கிறது. எனவே விதை வீரியமானது என்றாலும் அதை தகுதியான இடத்திலும் விதத்திலும் விதைத்திட விளைவோம்.
தகுதியற்ற வார்த்தைகளைத் தவிர்ப்போம் தகுதியான உறவுகளை நினைப்போம். அவர்களின் வளர்ச்சியில் தினம் நம்மையும் இணைப்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)