Perunthalaivar Kamaraj: இந்தியாவின் கர்ம வீரர்.. பெருந்தலைவருக்கு நவரத்ன அஞ்சலி!

Su.tha Arivalagan
Oct 02, 2026,01:20 PM IST

- கவிஞர் மல்லிகா செல்வராஜ்


விருதையின் தெய்வ விருட்சமே!

விந்தையின் சொரூபமே! 

சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்று 

முத்திரை பதித்த ரத்தினமே!


முத்து முத்தான மாணவக் கண்மணிகளுக்கு

சத்தான மதிய உணவு வழங்கியே.. 

கல்விக் கண் திறந்து வைத்த பவளமே! 


வைரமென வைராக்கியம் கொண்டு 

பல அணைகள் கட்ட ஆணை பிறப்பித்து,

வயல் வளம் காத்த வள்ளலே!! வைடூரியமே!!




தெய்வம் நமக்கு தந்த 

காணிக்கை போன்ற 

மாணிக்க மனம் படைத்த தானத் திலகமே! 


மக்கள் இதயங்களில் 

மரகதமாக வீற்றிருந்து,

புஷ்பமென நறுமணம் வீசிக் 

கொண்டிருக்கும் புஷ்ப ராகமே! 


கோது அற்ற கோமேதகமாய்...

நீலச் சுடர் வீசும் 

தீட்சண்யம் பெற்ற 

வான் மழையாய்... 

கருணை உள்ளம் படைத்த 

அருள் செயல் வீரரே!! 

தங்களின் நினைவு நாளான இன்று 

உம் சாதனைகளைப் போற்றி!!

பணிகின்றோம் நாங்கள்!!


(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் போன கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர், மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்து சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்!)