Gandhi: 10 ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கீங்களா.. அதில் இதைக் கவனிச்சிருக்கீங்களா?

Oct 02, 2026,01:15 PM IST

- அ.சுபாலட்சுமி


காந்தி ஜெயந்தி நாளான இன்று உங்களுக்கு ஒரு சுவராஸ்யமான செய்தியுடன் வந்திருக்கிறேன். எனது ரூபாய் சேகரிப்பின்போது நான் தெரிந்து கொண்டதை இங்கே பகிர்கிறேன்.


இந்திய ரூபாய் நோட்டுகளில் "M. K. GANDHI" (எம். கே. காந்தி) என்றுதான் முன்பு எழுதப்பட்டது. பிறகு அந்தப் பெயருக்குப் பதிலாக "MAHATMA GANDHI" (மகாத்மா காந்தி) என்று முழுமையாக 1996 ஆம் ஆண்டு முதல் மாற்றப்பட்டது. 


முதன்முதலில் 1987 ஆம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதில் காந்தியின் படத்திற்குக் கீழே "M. K. GANDHI" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. 1990களின் தொடக்கம் வரை புழக்கத்தில் இருந்த பல்வேறு நோட்டுகளிலும் இதே பெயரே பயன்படுத்தப்பட்டது. 


1996 இல் மகாத்மா காந்தி சீரிஸ் என்ற பெயரில் புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகமாகின. கள்ள நோட்டுகளைத் தடுப்பதற்காகவும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்காகவும், 1996 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய மகாத்மா காந்தி சீரிஸ் (Mahatma Gandhi Series) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. 




இந்த புதிய சீரிஸ் நோட்டுகளில்தான் அவரது பெயர் அதிகாரப்பூர்வமாக "MAHATMA GANDHI" என மாற்றப்பட்டு, அனைத்து மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளிலும் அவரது படம் நிரந்தர அம்சமாக்கப்பட்டது.


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்