கடவுள் தந்த வரம்!

Nov 17, 2026,11:00 AM IST

- சிவசத்தியா, காரைக்குடி


ஈருயிர் இணைந்து

ஒருதுளி உயிர்பித்து

உடலானதே உள்வெளி

அவயங்கள் மதிப்பே


உவமேயம் உண்டோ? 

இதற்கே  உண்டது

செரித்திட அண்டங்கள்

செழிக்க வென்றது


எதுவோ? கண்டது

யாரோ? சிறு

அண்டத்துள் பேரண்ட

ஐம்பெரும் பூதங்கள்




உயிர் ஓட்டங்களாய்

நவக்கோள்களே

நவ மையங்களாய்

அளவு முறையுடன் 


நாளும் ஓய்வின்றி 

உழைக்கும் நன்மணிகளே

மண்ணுலகில் மாந்தர்க்கு 

எல்லாம் மறையவன்


அருளிய அருட்கொடை

யன்றோ நோய்

தீர்க்கும் உலகில்

நல் ஔடதமாய்


மெய்ஞானப் பிறப்பே

கடவுள் வரமே

நலமே  நோயற்று

நீளாயுள் நிறை 


செல்வம் உயர்புகழ் 

பெற்று வாழ்ந்திட

பொன்னழகுப் பூ

மேனியைப் போற்று!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்