RIP Bharathiraja: பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை...

Su.tha Arivalagan
Jun 11, 2026,04:58 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


அலைகள் ஓய்வதில்லை... 


ஓயாத அலைகளினால்...


முட்டம் கடற்கரையில்  கடலோரக் கவிதைகள் பாடிக்கொண்டே ...


கிழக்கே போகும் ரயிலில்,

கொடி பறக்க... முதல் மரியாதையுடன்...

மண்வாசனை மாறாத

கிழக்குச் சீமையில் இருந்து....


16 வயதினிலே, புதுமைப்பெண் கருத்தம்மாவின்

புதிய வார்ப்பு;என் உயிர்த் தோழன்,





புது நெல்லு புது நாத்து கொண்டு நாடோடித்தென்றலுடன்..


வேதம் புதிதென காதல் ஓவியம் படைத்து..


தாவணிக்கனவுகள், சிகப்பு ரோஜாக்களை அள்ளி வீச...


கண்களால் கைது செய்யப்பட்ட ஒரு கைதியின் டைரி...


தாஜ்மஹால் தமிழ்ச்செல்வனின்.. நிழல்கள்.. இன்றல்ல, என்றும் மறையாது.... 


இதய அலை ஓய்ந்தாலும்....


பாரதிராஜா என்ற இயக்குநர் இமயத்தின் திரைப்படங்கள் என்னும் அலைகள் மனதில் டிக் டிக் டிக் என ஓயாமல் வந்து உறவாடிக் கொண்டே தான் இருக்கும்...


அலைகள் ஓய்வதில்லை....!


Miss you the great One and Only Bharathiraja!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).