சினிமாவின் சிகரம் சரிந்தது!

Jun 11, 2026,01:04 PM IST

- இரா. மும்தாஜ் பேகம்


ஏய் பாரதியே! ஏய் ராசாவே!

பதினாறு வயதினிலே மயிலை

பாலிவுட்டில் ஆட வைத்தாய்


பரட்டையையும் சப்பானியையும்

பார் போற்றும் ஸ்டார் ஆக்கினாய்


கடலோர கவிதையிலே காதலை காட்டினாய்

முதுமையிலும் காதல் வரும் என்பதை

முதல் மரியாதையில் காட்சியாக்கினாய்


கிழக்கே போகும் ரயிலில் ராதிகாவை ஏற்றிவிட்டாய் 

கிழக்குச் சீமையிலே படத்தில்

பாசமலர் தோற்கும் பாசத்தைக் காட்டினாய்




பாசத்தை பங்கு போட பட்டாயில்லை

உறவுகளின் பாசத்தை உரசிக் காட்டினாய் 

வேதம் புதிதில் இனவாதம் பேசினாய் 

மண்வாசனையில் நம் மண்ணின் மகத்துவம் காட்டினாய்


அல்லி ஊரில்  அவதரித்த கள்ளிக்காட்டு காவியம் நீ

பலப்பல ராசாக்களை உருவாக்கினாய்

ராசி என்றோ பெயர் சூட்டினாய்

ராதிகா, ரோஜா, ரேகா,ரேவதியென்று

முடி சூடா ராசாவே

நீ முகவரி தந்தாய் பலருக்கும்


அன்பின் ஆழமா...

அறிவூட்டும் வசனமா... கற்கண்டு காதலா...

கருத்தூறும் காவியமா...

சினிமாத்துறைக்கு சிகரம் நீ

"என் இனிய தமிழ் மக்களே" என்ற

கம்பீரக் குரலை காலமகள் கவர்ந்து சென்றாள்  


சிம்மக் குரலோனே....

உன்குரல் சிங்கத்தின் கர்ச்சனையாய் 

என் செவியில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.


(இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர், திருச்சி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்