எதிர்பார்ப்பில்லா அன்பைத்தரும் .. ஒவ்வொருவரும் அன்பர்கள்தானே!
- அ. வென்சி ராஜ்
காதலர் தினம் என்றால் காதலர்கள் மட்டும்தான் கொண்டாட வேண்டுமா என்ன.. காதல் என்றாலே அன்புதான்.. அப்படிப்பட்ட அன்பை எல்லோரும்தானே கொண்டாட முடியும். அப்படிப்பட்ட தினத்தில் எல்லோருமே தங்களுக்குள் அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே.
அதை வைத்து நமது திருவாரூர் அ. வென்சிராஜ் தீட்டிய அழகிய கவிதை:
அன்பான அன்னைக்கு...
கண்டிக்கும் தந்தைக்கு...
அரவணைக்கும் சகோதரனுக்கு....
வம்பிழுக்கும் சகோதரிக்கு..
பக்கபலமாய் இருக்கும் கணவன் /மனைவிக்கு..
நல்வழிப்படுத்தும் ஆசானுக்கு...
இறை நம்பிக்கையூட்டும் ஆன்மீக வழிகாட்டிக்கு...
தோளில் சுமக்கும் தோழன்,தோழிக்கு...
அன்பை கேட்கும் மகனுக்கு...
ஆற்றுப்படுத்தும் மகளுக்கு..
கீழ்ப்படிதல் உள்ள மாணவச் செல்வங்களுக்கு...
எதிர்பார்ப்பில்லா அன்பைத்தரும்
இப்படி..
எல்லாமுமாய் இருக்கும்
ஒவ்வொருவருக்கும்
இனிய அன்பர் தின நல்வாழ்த்துகள்
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)