பணம் மதிப்பிழக்கும் தருணங்கள்!

Su.tha Arivalagan
Nov 12, 2026,04:47 PM IST

- அ.வெங்கடேஷ்


விழாக்கால கொண்டாட்ட மனநிலையில் எப்படியாவது வீட்டிற்கு சொந்த ஊருக்கு வர வேண்டும் என பேருந்தில் மல்லுக்கட்டி ஓர் இடம் பிடித்து நின்றும், படியில் தொங்கியும், பெற்றோரையும் சொந்தங்களையும் சந்திக்க, பாலிய கால நினைவுகளை மீட்க திரும்பினர் சொந்த ஊர் .


இனிய நினைவுகளை சேர்த்து பண்டிகை முடிந்த பின் ஏக்கத்துடன் அருகில் இருந்து பெற்றோருக்கு உற்றாருக்கும் உதவவோ உறுதுணையாக இருக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வோடும் விடுமுறை முடிந்து பள்ளி திரும்ப விரும்பாத குழந்தை போல் பணிக்கு திரும்புவோம். 


கல்லூரியில் விடுதி சோறு சாப்பிட்டவர்கள் அடுத்த விடுமுறை வரும் வரை அம்மாவின் கை மனம் கனவில் என்றும் இருந்து கொண்டிருக்கும்.




இவ்வாறு இனிய நினைவுகளைத் தந்து சென்ற விழாக்கள் அடுத்து எப்பொழுது வரும் என்று காத்திருந்து முன்பே திட்டமிட்டு பணத்தைப் பார்க்காது முன்பதிவு செய்து வைக்கும் மனங்களில் பணம் மதிப்பிழக்கத்தான் செய்கிறது.


பணத்திற்காகவும் படிப்பிற்காகவும் பயணிப்பவர்களின் விழா கால விடுமுறைகள் கழியும் இவ்வண்ணம்.


(கவிஞர் அ வெங்கடேஷ், திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இருள் என்பது குறைந்த ஒளியே என்ற நூலின் ஆசிரியர்)