என்னுள் மலர்ந்த ஓர் கவிதை!

Nov 12, 2026,04:20 PM IST

- சு.லோகஸ்ரீ


மலரே! உனக்கு நிகர் நீயே!

வானவில்லின் ஏழு வண்ணங்களையும்

தன்னுள் சுமந்தவள் நீ!


வாசனைத் தென்றலின் வழியே

மனங்களை மயக்குபவள் நீ!


பனித்துளிகள் உன் இதழ்களைத் தீண்டும்போது,

இயற்கையே உன்னை ரசிப்பதுபோல் தோன்றுகிறதே!


உன்னைக் காணும் ஒவ்வொரு நொடியும்,

என் உள்ளமும் அழகாய் மலர்கின்றதே!




தேனீக்களின் காதலி நீ!

தென்றலின் தோழி நீ!

இயற்கையின் ஓவியம் நீ!

இவ்வுலகின் மலரரசி நீ!


மலரே! 

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?


இவ்வுலகில் ஒரு மனிதன்,

தன் முதல் மூச்சு முதல் இறுதி மூச்சு வரை,

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்

உன்னையே நாடி நிற்கின்றான்!


பிறப்பின் மகிழ்ச்சியிலும் நீ!

காதலின் பரிசிலும் நீ!

இறைவனின் பாதங்களிலும் நீ!

இறுதி பிரியாவிடையிலும் நீ!


உன் ஆயுள் காலமோ ஒரு நாள்...

ஆனால் உன் அழகின் நினைவுகளோ

காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கின்றன!


உன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினால்,

வார்த்தைகள்கூட வசமிழந்து போகின்றன!


உன் சிறப்புகளை விவரிக்கத் தொடங்கினால்,

கவிதைகளும் முடிவின்றித் தொடர்கின்றன!


இத்தனை சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டவளே,

இயற்கையின் அழகிய அதிசயமே!

மலரே! 

இந்த உலகில்

உனக்கு நிகர் நீ மட்டுமே!


(சு. லோகஸ்ரீ, மூன்றாம் ஆண்டு இளநிலை வரலாற்றுத் துறை மாணவி, பொழுதுபோக்கு: வரலாற்றுப் புத்தகங்கள் படிப்பது, விண்வெளி மற்றும் வானியல் பற்றி அறிதல், சிறுகதைகள் எழுதுதல் போன்றவை).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்