என் கனவுத் தோட்டம்

Nov 12, 2026,02:49 PM IST

- என். காஞ்சனப்பிரியா


என் கனவுத் தோட்டம் நான்கு பகுதியாய் மலரும்,

ஒவ்வொன்றும் அழகாய் என் மனதில் ஒளிரும்.


முதல் பகுதி மலர்த் தோட்டம் அழகு,

ரோஜா, லில்லி, மல்லிகை, செம்பருத்தி வளரும் தினமும் புதிது,

வானவில் வண்ணங்கள் எங்கும் விரியும்,

நாள் முழுதும் இனிமை தந்து மனம் சிரிக்கும்.


இரண்டாம் பகுதி காய்கறித் தோட்டம் இயற்கை,

இயற்கை உரத்தில் விளையும் காய்கள் நல் வாழ்க்கை,

சத்தும் சுவையும் நிறைந்து தரும் பலம்,

தினமும் உடலுக்கு அதுவே பெரும் வளம்.




மூன்றாம் பகுதி மூலிகைத் தோட்டம் சொர்க்கம்,

துளசி, புதினா, கற்றாழை, இஞ்சி, மஞ்சள் தரும் பக்கம்,

எலுமிச்சை புல் மணம் வீசி நிற்கும்,

இயற்கை மருந்தாய் நம் மனதை மகிழ்விக்கும்.


நான்காம் பகுதி மரங்கள் சூழ்ந்த மியாவாக்கி காடு,

தென்னை, மா, வேம்பு, நெல்லி நிற்கும் நீண்டு நெடிது,

கொய்யா, வாழை, முருங்கை சுற்றி வளரும்,

பசுமை எங்கும் பரவி குளிர்ச்சி தரும்.


மர நிழலில் குழந்தைகள் ஊஞ்சல் ஆடும்,

பறவைகள் பாடி அங்கே சிறகடித்து ஓடும்,

அணில்கள் துள்ளி உணவைச் சுமந்து செல்லும்,

சேவல் கோழி அங்கும் இங்கும் நடந்து செல்லும்,

வெள்ளை முயல் குட்டி வளையில் மகிழ்ந்து வாழும்.


இது நமக்கு மட்டும் சொந்தமான இடமல்ல,

இயற்கை அன்னைக்கே இது ஒரு அழகிய கூடு,

என் கனவுத் தோட்டம் என்றும் பசுமை கூடும்.


(N. காஞ்சனப்பிரியா, இடைநிலை ஆசிரியர், ஊ.ஒ.தொ.பள்ளி, ஆலாங்காட்டுவலசு, நாமக்கல்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Afternoon Thoughts: தித்திக்கும் தேன் செய்யும் காரியத்தைப் பாருங்களேன்!

news

என் கனவுத் தோட்டம்

news

நெல்லை ஸ்பெஷல் முந்திரிக் கொத்து சாப்பிட்டிருக்கீங்களா!

news

பொங்கல் பண்டிகை 2027: சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்

news

“ஒரு பக்கெட் தண்ணீரைக் கூட கர்நாடகாவால் நிறுத்த முடியாது” - துரைமுருகன் திட்டவட்டம்

news

கந்த சஷ்டி விரதம் 3ம் நாள்.. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகிமை

news

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: அன்பில் மகேஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

news

நான் தாழ்ப்பாள் பேசுகிறேன்!

news

திரிபுரம் எரித்த திருவிளையாடல்.. அருள்மிகு திருவதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோயில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்