நான் தாழ்ப்பாள் பேசுகிறேன்!

Nov 12, 2026,01:04 PM IST

- கவிதை மழை அ. நவஜோதி அருண்


பிறர் இழுத்த இழுப்பிற்கெல்லாம்

இணைந்து

போவதால்... 


சொந்த

விருப்பத்திற்கு

நகர முடியாது

கிடக்கிறேன்....!


வீட்டுக்

கதவின் சுதந்திரம்

களவாடினாலும், 


காற்றின்

சுதந்திரத்தை,

என்னால் பறிக்க இயலவில்லை...!


விளையாட்டுப்

பிள்ளைகள்

விநோதமாக

பார்க்கிறார்கள்...! 




வேடிக்கையாக

உற்றுப்பார்த்து

வெடுக்கெனத்

எனைத்தூக்கி

அடிப்பார்கள்...! 


எட்டாத

எனைத்தொங்கி

சாத்திவிட்டே

சத்தமிடுவார்கள்...!


பல இரகசியங்கள்,

என்னை

இழுத்து மூடியே

பேசப்படும்...! 


எதிர்வீட்டுக்காரனோ? 

இடைஞ்சல்காரனோ? 

கடன்காரனோ?

காலம்

போக்குவோனோ? 

வந்துவிட்டால்... 


தடுத்துநிற்பேன்;

தயக்கமின்றி

சொல்வேன்...


உள்ளே ஓனர் (ஆள்)இருந்தும்

இல்லையென

உள்வராதபடி... 


கண்ணீரின்

ஓலம்......


கவலைகளின்

காலம்..... 


மீளாத் துயரம்...


கத்தி சிரித்த

மகிழ்ச்சி... 


கண்டபடி போட்ட

சண்டை...


சொல்லமுடியா

இரகசியம்...


மெல்ல முடியா

கதைகள்... 


யாருக்கும்

தெரியக் கூடாதென்று... 

எனக்கு மட்டுமே

தெரியும்படி

நடக்கும்...


அத்தனை

உணர்வும், 

என்னோடே

தொங்கிக் கொண்டு

கிடக்கும்...!


சரி! எல்லோரும்

போய் வாருங்கள்

பத்திரமாக

பார்த்துக் கொள்கிறேன்

வீட்டை...!


(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர்.  சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்