மழலையின் மகிமை!

Nov 12, 2026,03:16 PM IST

- பா. பானுமதி


சுசிலாவும் சரவணனும் நல்ல மனம் ஒத்த தம்பதியர். இருவரும் நன்றாகவே குடும்பத்தை நடத்திச் செல்பவர்கள். வரவுக்கு ஏற்ற செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் தான். அவர்களுடைய ஒரே மகன் அமுதன். அமுதன் நல்ல அழகானவன் அறிவான குழந்தை.


வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல எவ்வளவு தான் பொறுப்பாக இருந்தாலும் அடிக்கடி சிறு சிறு சண்டைகள் வர தானே செய்யும். அன்றும் அப்படித்தான். தீபாவளி செலவுகளை குறித்து இருவரும் பேசும் போது பேச்சு முற்றிப்போய் சண்டையாக மாறிவிட்டது.


முடிந்தவரை சண்டை போடுவது பிள்ளைக்கு தெரியாதது போல பார்த்துக் கொள்வார்கள், என்றாலும் அவ்வப்போது சுசிலாவின் கண்கள் கலங்கி இருப்பதும் சரவணன் சத்தம் போடுவதும் குழந்தை அறிந்து தான் இருந்தான், அறிவாளி குழந்தை அல்லவா.




அன்று அவன் அம்மா தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். சரவணன் வேகமாக சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டார். விளையாடிவிட்டு உள்ளே வந்த குழந்தை வீட்டின் நிலைமை அறிந்து மனம் வருந்தியது. எப்படி தன் அம்மாவை சமாதானப்படுத்துவது என்று  அம்மா அழாதே அம்மா என்று ஏதேதோ கூறினான்.


ஆனாலும் அழுகை நிற்கவில்லை. அப்போது தான் மழலை மொழியில் ஒன்றைக் கூறினான். சட்டென அழுகை நின்று பிள்ளையை வாரி அணைத்துக் கொண்டான் சுசீலா.


அம்மா நீ கவலைப்படாதே அம்மா. நான் உன் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி விடுகிறேன். உன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரும் வராமல் பார்த்துக் கொள்கிறேன். அப்பா அவர்கள் அம்மாவிடம் செல்லட்டும். நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கூறினானே பார்க்கலாம் 


மழலைக்கு மயங்காதவர் யாரேனும் உண்டா!


(கவிஞர் பா. பானுமதி, ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர். மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்