யானை சவாரி!

Su.tha Arivalagan
Oct 16, 2026,12:00 PM IST

- அ.வெங்கடேஷ்


நான் கேரளா சென்ற பொழுது யானை சவாரி செய்தேன். காட்டின் அரசனாக கம்பீரமாக உலா வந்த யானை, புகைப்படத்திற்காக ஆசீர்வாதம் செய்வது போல் நிற்கிறது. ஆணைக்கு அடிபணியும் அந்த யானைக்குள் ஒரு காடே உறங்கிக் கிடக்கிறது.


பயணத்தின் போது எடுத்த படத்தைப் பார்க்கையில், கானகத்தை கனவில் காணும் யானை நினைவுக்கு வருகிறது. ஜெயமோகன் அவர்களின் 'அறம்' சிறுகதைத் தொகுப்பில் உள்ள 'வணங்கான்' சிறுகதையில், அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்காமல் ஒடிந்தும் விடாமல் நின்ற கதைசொல்லியின் தந்தை, நேசமணி அவர்களை யானை மீது அமர வைத்து ஊருக்குள் சுற்றி வந்த நிகழ்வை விவரிக்கிறார். அந்த நிகழ்வுக்குப் பின் அவரது நடையே மாறியதோடு, தன் மகனுக்கு 'வணங்கான்' என்று பெயரிடவும் அது தூண்டியது.


யானை மீது அமர்ந்து செல்வதை வர்ணிக்கும்போது, அனைத்தும் தன் காலுக்குக் கீழே செல்வது போல் தோன்றும். இது நேர்மையாய் இருப்பவர்கள் வாழ்வில் உயரலாம் என்பதன் குறியீடாக இருக்கலாம். யானை மேல் இருந்து தன்னை அடக்க முயன்ற பண்ணியாரின் வீட்டின் ஓட்டின் மீது கால் வைத்துத் திரும்புவார்; அதன்பின் அவரிடம் ஒரு பெருமிதம் கூடும்.




வானை நோக்கி உயர எடுத்துச் செல்ல விரும்பும் வணங்கா மா (பெரிய) உருவம், மதம் கொண்டு வர்த்தகக் குழுக்களுக்கு இடையே அருகில் எவருமின்றி அமைதியாய் குழந்தை போல் இருக்கையில், செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் யானை... வணங்குவதற்குரிய வணங்கானாகவே நம் கண்முன்னே நிற்கிறது.


(கவிஞர் அ.வெங்கடேஷ், M.A., B.Ed. (அரசு பள்ளி ஆசிரியர், புளியம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்) "இருள் என்பது குறைந்த ஒளியே" என்னும் புத்தகத்தின் ஆசிரியர். பொழுதுபோக்குகள்: புத்தகம் வாசிப்பது, புத்தகத்தின் மதிப்பை பிறருக்கு எடுத்துரைப்பது, கவிதை எழுதுவது, இயற்க்கை விரும்பி)