ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?
- சிவ.ஆ. மலர்விழி ராஜா
கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ளது. ஆதி கும்பேஸ்வரர் கோயில். அதன் வரலாறு படிக்கப் படிக்க மெய் சிலிர்க்கும். அப்படி ஒரு அற்புதமான ஆன்மீகத் தலம் அது.
அருள்மிகு மங்களாம்பிகை உடனாகிய ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகளை இங்கே பார்ப்போம்.
கலியுகம் ஆரம்ப முதலே ஈஸ்வரன் இந்த ஸ்தலத்தில் அருள்பாலிப்பதால் இதற்கு ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயர் வழங்க பெற்றது. ஆதி என்றால் ஆரம்பம்" முதல் என்பதனாலும் கும்பத்தில் இருந்து தோன்றியதனாலும் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது . கும்ப வடிவில் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது. காசியில் விஸ்வநாதரை தரிசித்து கங்கையில் நீராடினால் மட்டும் பாவங்கள் முடிவு பெறாது. ஆதி கும்பேஸ்வரரையும் தரிசித்தால் மட்டுமே பாவங்கள் விலகும் என்பது நியதி.
12 ராசியில் உள்ள அனைவருமே தரிசிக்க கூடிய விசேஷமான திருத்தலம். கும்பேஸ்வரர் கோயில் திருமணத்தடை நீங்கவும் புத்திர பாக்கியம் பெறுவதற்கும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் புத்தி கூர்மை பெறவும் நல்ல வேலை பெறவும் இந்த ஸ்தல ஈஸ்வரனை வணங்கினால் நற்பேறு பெறலாம் என்பது திண்ணம்.
ஊழி முதல்வன் என்று சொல்லக்கூடிய கும்பேஸ்வரர் கோயிலில் :
72 ஆயிரம் கோடி மந்திரங்கள் அமைந்த பீடத்தின் மீது ரிஷிகள் முனிவர்கள் மந்திரங்கள் முழங்க அம்பாளை பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம் . எனவே மந்திர பீடேஸ்வரி மங்களாம்பிகை என்ற பெயர் அம்பாளுக்கு வழங்கப்பட்டது . சுவாமி பெயர் ஆதி கும்பேஸ்வரர்.
சுயம்பு மூர்த்தி:
சுயம்பு மூர்த்தி என்றால் கருங்கல் விக்ரகம் தானாக பூமியிலிருந்து தோன்றுவது. ஆனால் இங்கு அப்படி இல்லை. ஈஸ்வரனே அமிர்தமும் மணலும் ஜலமும் கலந்த கும்ப வடிவாக லிங்கமாக கைகளால் செய்து வடிவமைக்கப்பட்டு வழிபட்ட ஸ்தலம் .
யுகங்கள் 4
1. கிருத யுகம் 2.திரேதா யுகம்.3. துவாபரயுகம் 4. கலியுகம் என்பது. ஒவ்வொரு யுகத்திற்கும் இத்தனை லட்சம் என கால அவகாசம் என்பது உள்ளது. அந்த காலம் முடிந்து விட்டால் உலகம் அழிந்து மீண்டும் புதுயுகம் உருவாகும். இதுவே உலக நியதி.
மூன்றாவது யுகமான துவாபர யுகத்தின் முடிவில் கலியுகத்தை உற்பத்தி செய்கின்ற சிருஷ்டி கருத்தவான பிரம்மா ஜீவ ஆத்மாக்களை பாதுகாக்கவும் உலகை மீண்டும் உற்பத்தி செய்யவும் ஈஸ்வரனிடம் உதவி கோருகின்றார். அப்போது ஈஸ்வரன் ஒரு அமிர்த கலசத்தில் அமிர்தம்' மணல் 'ஜலம்' இதனை பூரணம் செய்து ஜீவ ஆத்மாக்களை ஆவாகனம் செய்து பிரம்மனிடம் கொடுத்து
இதனை பிரம்மலோகத்தில் உள்ள மேரு பர்துஉச்சி மேல் வைத்து பூஜை செய்து பாதுகாக்க சொல்கிறார்.
பிரம்மாவும் வேதங்கள் ஆகமங்கள் சாஸ்திரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் மந்திரங்கள் ஜெபித்து பூஜை செய்து பாதுகாத்து வருகிறார். காலம் முடிகிறது கலப்பிரளயம் ஏற்படுகிறது . வெள்ளம் ஏற்பட்டு உலகம் அழிகிறது. அப்போது பிரம்மலோகமும் அழிந்து விடுகிறது. இந்த அமிர்த கலச கும்பம் அந்த நீரினில் மிதந்து வந்து தற்போது உள்ள இந்த ஆலயத்தில் உள்ள சன்னதியில் தங்குகிறது. வெற்று பூமியாக உள்ள இடத்தில் இந்த அமிர்த கலசம் மிதந்து வந்து தங்கிய இடமே இப்போது உள்ள கும்பேஸ்வரர் கோயில் .
ஈஸ்வரன் கிராதமூர்த்தி அவதாரம் எடுத்து வேட மூர்த்தியாக வருகிறார். ஈஸ்வரனுக்கு 25 வகையான அவதாரங்கள் உள்ளது அமிர்த கலசத்தை வேட மூர்த்தியாக அம்பு எய்து உடைக்கின்றார். பிரம்மனிடம் பூஜை செய்து கொடுத்த ஜீவ ஆத்மாக்களை வெளியில் கொண்டு வருகிறார். மேலும் அதில் உள்ள அமிர்தம் மணல் ஜலத்தினை தனது கைகளாலேயே லிங்க வடிவமாக செய்து அதனுள் அவரே அந்தர் பாவகமாக செல்கிறார். அதன்பின் இந்த உலகம் உருவாகிறது.
உலகம் உருவானது முதல் உள்ள ஆலயம் என்பதினால் ஆதி கும்பேஸ்வரர் கோயில் என்ற திருப்பெயரும் வழங்கலாயிற்று. நேற்று இந்த ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு திரு குடமுழுக்கு விழா காலை 6:30 மணிக்கு இறைவனின் திருவருளால் இனிதே நடந்தேறியது. இறைவனின் அருளை நாமும் பெற்று நல்வாழ்வு வாழ இறைவனை வணங்குவோம்.
ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
(சிவ.ஆ. மலர்விழி ராஜா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)