இதயம் நுழைந்து சிறு சிறு தூறலாக மடல் நிறைந்து வழிந்தோடி!
Oct 24, 2026,12:55 PM IST
- அமிர்தம் ரமேஷ்
பூக்களைப் பறித்து
கவிச்சரம் தொடுக்கவா...!
இல்லை
பாடும் குயிலை
இன்னிசை கச்சேரிக்கு
அழைக்கவா...!
இல்லை
பூக்களின் மேல்
ரீங்காரமிடும்
வண்டுகளை
கவிமெட்டமைக்க
அழைக்கவா...!
இல்லை
வண்ணத்துப்
பூச்சியின் அழகில்
மயங்கி கவி படைக்கவா...!
இல்லை
வர்ணங்கள் கொண்டு கவி ஓவியம் தீட்டவா...!
இல்லை
ருசி மிக்கப் பழம் தந்த மரத்தைப் பாராட்டி
கவிதை படைக்கவா...!
இல்லை
கரைந்தழைத்து
பகிர்ந்துண்ணும்
காகத்தை
கவித்தேரில் ஏற்றி வரவா...!
சிறு சிறு தூறலாக
மடல் நிறைந்து வழிந்தோடுகிறது
விரும்பும் எவரும்
என் கவி அமுதைப்
பருகலாம்