ஐம்பதைத் தாண்டியும் ஆழ் மனதின் ஓரத்தில்!
Aug 11, 2026,01:59 PM IST
- அமிர்தம் ரமேஷ்
பச்சை நிற
பாவாடை
வெண் நிற
தாவணி
தோள்
தாங்கும்
புத்தகப் பை
மல்லிகை
மணக்கும்
பின்னிய
கூந்தல்
தலை
நிமிரா
ஓரக்கண்
பார்வை
ஐம்பதை
தாண்டியும்
அச்சாரமிட்டு
நிற்கிறது
இளமைக்
கால
நினைவுகள்